பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட் கடும் உயர்வு.. டெல்லி, மும்பையை விட அதிகரிப்பு!

Bengaluru Metro Fare Hike: பெங்களூருவின் நம்ம மெட்ரோவின் டிக்கெட் விலையை பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (பி.எம்.ஆர்.சி) திருத்தியுள்ளது. தற்போது, அதிகபட்ச கட்டணம் ரூ.60 லிருந்து ரூ.90 ஆக மாற்றப்பட்டுள்ளது.

Published on: February 12, 2025 at 6:33 pm

பெங்களூரு மெட்ரோ டிக்கெட் உயர்வு: பிப்ரவரி மாதத்தில் பெங்களூருவின் நம்ம மெட்ரோ ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (பி.எம்.ஆர்.சி) மெட்ரோ கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தது.

திருத்தப்பட்ட பிறகு, குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 ஆக இருந்தது, அதிகபட்ச கட்டணம் ரூ.60 லிருந்து ரூ.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது டெல்லி மற்றும் மும்பையை காட்டிலும் அதிக கட்டணம் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 50 சதவீத உயர்வு எனக் கூறப்படுகிறது.

மெட்ரோ பயணிகள் வருகை சரிவு

பெங்களூரு மெட்ரோ கட்டணங்களின் விலையில் ஏற்பட்ட இந்த உயர்வு பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் பரபரப்பாக காணப்படும் திங்கட்கிழமை நாளில் கூட பயணிகள் வருகையும் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில், திங்கட்கிழமை பயணிகளின் எண்ணிக்கை 4% குறைந்து 8.29 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கருமுட்டையை பாதுகாக்க மறுப்பு.. நீதிமன்றத்தை அணுகிய திருநம்பி.. விநோத வழக்கு!

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு!
Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com