Bengaluru Gang Rape Case: பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Bengaluru Gang Rape Case: பெங்களூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published on: February 22, 2025 at 1:26 pm
கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களா பகுதியில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெள்ளிக்கிழமை (பிப்.21, 2025) புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு இடைப்பட்ட நேரத்தில், அந்தப் பெண் 4 நபர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து பெண் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், மேற்கு வங்கம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், அஜித், விஸ்வாஸ் மற்றும் ஷிவு ஆகியோர் ஆவார்கள். குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள ஹோட்டலில் பணிபுரிந்துள்ளனர். இந்த வழக்கு குறித்து பெங்களூரு தென்கிழக்கு துணை காவல் ஆணையர் சாரா பாத்திமா, இந்தக் குற்றம் தொடர்பாக வெள்ளிக்கிழமை (பிப்.21, 2025) காலை 7.30-8 மணியளவில் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது என்றார்.
மேலும், பாதிக்கப்பட்டவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை மற்றும் பிற நடைமுறைகள் உட்பட அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன என்றார். தொடர்ந்து, விசாரணையின் போது கூடுதல் விவரங்களை அறிந்து கொள்வோம். முதற்கட்ட விசாரணையில் அவர் ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, இந்த ஆண்டு (2025) ஜனவரியில், பெங்களூருவின் ஹொய்சாலா நகர் பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் ஆறு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :தேசிய கல்விக் கொள்கை.. அரசியல் பார்வை கூடாது.. மு.க ஸ்டாலினுக்கு பிரதான் கடிதம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com