டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி இன்று (செப்.21, 2024) மாலை பதவியேற்றுக்கொண்டார்.

October 17, 2025
டெல்லியின் 3வது பெண் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி இன்று (செப்.21, 2024) மாலை பதவியேற்றுக்கொண்டார்.
Published on: September 21, 2024 at 7:06 pm
Delhi CM Atishi Marlena Oath ceremony | டெல்லி முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த எம்.எல்.ஏ அதிஷி இன்று (செப்.21, 2024) ராஜ் பவனில் பதவியேற்றுக் கொண்டார்.
அவருடன், ஐந்து அமைச்சர்கள் கொண்ட அவரது அமைச்சரவையும் பதவியேற்றது. சுஷ்மா சுவராஜ், ஷீலா தீட்சித் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக அதிஷி பொறுப்பேற்றுள்ளார்.
மேலும், மம்தா பானர்ஜிக்குப் பிறகு பதவியில் இருக்கும் இரண்டாவது பெண் முதல்வர் என்ற பெருமையையும் பெற்றார். சுதந்திரம் பெற்றதில் இருந்து, அவர் நாட்டின் 17வது பெண் முதல்வர் ஆவார். அதிஷியின் அமைச்சரவையில், சுல்தான்பூர் மஜ்ராவின் எம்.எல்.ஏ.வான முகேஷ் அஹ்லாவத் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
महत्वपूर्ण प्रेस कॉन्फ्रेंस। LIVE https://t.co/obj9PVdxaM
— Atishi (@AtishiAAP) September 21, 2024
மேலும், இந்த புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தில் கோபால் ராய், கைலாஷ் கெலாட், சவுரப் பரத்வாஜ், மற்றும் இம்ரான் ஹுசைன் ஆகிய நான்கு அமைச்சர்களும் உள்ளனர்.
அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்த சூழ்நிலையில் அதிஷி பதவியேற்றுள்ளார். இவர் விரைவில் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.
दिल्ली में नई सरकार गठन का शपथ ग्रहण कार्यक्रम। LIVE https://t.co/wsY3l5BTQ0
— Atishi (@AtishiAAP) September 21, 2024
பதவியேற்பதற்கு முன்னதாக, அதிஷி கெஜ்ரிவாலை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார். கூட்டத்திற்குப் பிறகு, அதிஷியும் மற்ற அமைச்சர்களும் கட்சியின் தேசிய அமைப்பாளருடன் ‘ராஜ் நிவாஸ்’ சென்றடைந்தனர்.
டெல்லி அமைச்சரவையில் முதல்வர் உட்பட அதிகபட்சம் ஏழு அமைச்சர்கள் இருக்கலாம், ஆனால் ஆம் ஆத்மி கட்சி இதுவரை 6 அமைச்சர்களை மட்டுமே பெயரிட்டுள்ளது. ஏழாவது உறுப்பினரின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘ராகுல் நம்பர் 1 பயங்கரவாதி’: மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com