Amit Shah | Jammu and Kashmir | ‘சட்டப்பிரிவு 370 இப்போது வரலாறு, மீண்டும் வராது’ என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
![ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்](https://dravidantimes.com/wp-content/uploads/elementor/thumbs/Air-india-express-qzgfrz3uwic5xvtqaing9mfg1dx9vr5kwapxfio77s.png)
February 6, 2025
Amit Shah | Jammu and Kashmir | ‘சட்டப்பிரிவு 370 இப்போது வரலாறு, மீண்டும் வராது’ என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
Published on: September 6, 2024 at 7:58 pm
Amit Shah | Jammu and Kashmir | உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை (செப். 6, 2024) ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் அறிக்கையை ஜம்முவில் வெளியிட்டார். அப்போது, “370வது பிரிவு வரலாறு ஆகிவிட்டது; யூனியன் பிரதேசத்தில் மீண்டும் வராது” என்றும் வலியுறுத்தினார்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமித் ஷா, “கடந்த 10 ஆண்டு காலம் நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதப்படும்” என்றார். மேலும், “நல்லாட்சி தொடர மக்கள் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
Speaking at the launch of the BJP’s Sankalp Patra for Jammu and Kashmir. #BJPJnKSankalpPatra https://t.co/W8C5eAph8r
— Amit Shah (@AmitShah) September 6, 2024
ஜம்மு காஷ்மீரில் செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் இரண்டு நாள் பயணமாக அமித் ஷா ஜம்மு சென்றுள்ளார்.
அமித் ஷா செய்தியாளர் சந்திப்பின்போது, “370 வது பிரிவு இனி அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இல்லை. கடந்த காலங்களில் இளைஞர்களின் கைகளில் கற்களும், ஆயுதங்களும் அளிக்கப்பட்டன. இது, பயங்கரவாதத்தின் பாதையில் செல்ல அவர்களுக்கு வழிவகுத்தது” என்றார்.
மேலும், “எந்த முடிவு வந்தாலும் குஜ்ஜார், பேக்கர்வால்கள் மற்றும் பஹாடிகளுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டைத் தொட நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம் என்பதை நான் உமர் அப்துல்லாவிடம் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.
இதையடுத்து, “ஜம்மு காஷ்மீரில் இருந்து பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்ற அமித் ஷா ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி தொடர 5 ஆண்டுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு கொடுங்கள்” என்றார்.
முன்னதாக ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்க குரல் கொடுப்போம் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலளிக்கும் வகையில் அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காங்கிரஸில் இணைந்த வினேத், புனியா: ஹரியானா தேர்தலில் போட்டி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com