Special Trains | தசாரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கருத்தில் கொண்டு தென் மத்திய ரயில்வே 48 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
February 6, 2025
Special Trains | தசாரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கருத்தில் கொண்டு தென் மத்திய ரயில்வே 48 சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
Published on: September 19, 2024 at 10:10 am
Special Trains | தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக காணப்படும். இதனால் இதுபோன்ற பண்டிகை நாட்களில் ரெயில்வே துறை சிறப்பு ரெயில்கள் அறிவித்து பயணத்தை சுலபமாக்குகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு தசரா, தீபாவளி மற்றும் சாட் பண்டிகைகளை கருத்தில் கொண்டு அக்டோபர் 11 முதல் டிசம்பர் 2 வரை 48 சிறப்பு ரயில்களை தெற்கு மத்திய ரயில்வே (SCR) இயக்குகிறது.
ரயில் எண் 07625 நாந்தேட்-பன்வெல் ரயில் அக்டோபர் 21 முதல் நவம்பர் 27 வரை ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் இயக்கப்படும்.
இதேபோல், ரயில் எண் 07626 பன்வெல்-நாந்தேட் ரயில் சேவை அக்டோபர் 22 முதல் நவம்பர் 28 வரை ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இயக்கப்படும்.
ரயில் எண் 06071, கொச்சுவேலி-நிஜாமுதீன் ரயில், அக்டோபர் 11 முதல் 29 வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயக்கப்படும்.
அதே நேரத்தில், ரயில் எண் 06072, நிஜாமுதீன்-கொச்சுவேலி ரயில், அக்டோபர் 14 முதல் டிசம்பர் 2 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இயக்கப்படும்.
மேலும், ரயில் எண் 01451, புனே-கரீம்நகர், அக்டோபர் 21 முதல் நவம்பர் 11 வரை ஒவ்வொரு திங்கட்கிழமையும் இயக்கப்படும்.
இதற்கேற்ப, ரயில் எண் 01452, கரீம்நகர்-புனே, அக்டோபர் 23 முதல் நவம்பர் 13 வரை ஒவ்வொரு புதன்கிழமையும் இயக்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : கத்ரா வைஷ்ணவோ தேவி கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: நேரம், தேதி செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com