Karnataka| பெங்களூருவில் உயர்ரக சேலை திருடி மாட்டிக்கொண்ட 4 பெண்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
Karnataka| பெங்களூருவில் உயர்ரக சேலை திருடி மாட்டிக்கொண்ட 4 பெண்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
Published on: September 4, 2024 at 8:23 pm
Karnataka| பெங்களூரு ஜெ.பி நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் உயர்ரக சேலையை திருடியதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களை பெங்களூரு சிட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள், ஜானகி, மேதா ரஜனி, வெங்கடேஷ்வரம்மா மற்றும் பொன்னுரு வள்ளி ஆகியோர் ஆவார்கள்.
கடையில் திருடப்பட்ட இந்த உயர்ரக சேலைகளின் மதிப்பு ரூ.17.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. இவர்கள் தங்களின் உடைகளில் மறைத்து 10 சேலைகள் வரை திருடியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
இவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் ஊழியர்கள் சோதனை செய்ததாகவும், அப்போது இவர்கள் சேலை திருடியது தெரியவந்தது எனவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பெண்கள் கூட்டமாக வந்து திருடியுள்ளனர். இவர்கள் உடன் வந்த 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட 4 பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க முற்பிறவி காதல், உறவு, கர்ப்பம்; அமெரிக்க பெண்ணை சீரழித்த யோகா ஆசிரியர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com