டெல்லியில் நில அதிர்வு.. வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!

Earthquake hit Delhi-NCR: டெல்லி- என்.சி.ஆரில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது, மற்ற பகுதிகளிலும் காணப்பட்டது.

Published on: February 17, 2025 at 9:12 am

புதுடெல்லி: டெல்லி என்சிஆர் பகுதிகளில் நிலநடுக்கம்: டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் வசிப்பவர்கள் பலத்த நிலநடுக்கங்களுடன் விழித்தெழுந்தனர்.
தெற்கு டெல்லியின் தௌலா குவானில் உள்ள துர்காபாய் தேஷ்முக் சிறப்பு கல்வி கல்லூரிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அதிகாலை 5.36 மணிக்கு ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் ட்வீட் செய்துள்ளது.
டெல்லி என்.சி.ஆர் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பலத்த சத்தம் கேட்டதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நிலநடுக்கத்தின் போது கேட்ட சலசலப்பு சத்தம் நிலநடுக்கத்தின் ஆழம் குறைவாக இருந்ததன் விளைவாக இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது, டெக்டோனிக் தகடுகளின் இயக்கம் மற்றும் பல ஆற்றல் வெடிப்புகள் காரணமாக இது ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பலத்த நிலநடுக்கத்தை சந்தித்ததால் பலர் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இதற்கிடையில், நிலநடுக்கத்தின் போது மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர்.
மேலும், மின்விசிறிகள் அங்கும் இங்கும் ஆடின. இதனை காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

மேலும், இந்த நிலநடுக்கம் குறித்து, சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. டெல்லியில், தௌலா குவான் பகுதியில், இரண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குறைந்த அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அதாவது, 2015 ஆம் ஆண்டில் இது 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைப் பதிவு செய்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

பிரதமர் மோடி

இதற்கிடையில், மக்கள் அமைதியாக இருக்கவும், சாத்தியமான பின்அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க டெல்லி ரயில் நிலையத்தில் திடீர் நெரிசல்.. 18 பேர் உயிரிழப்பு

திருச்சி ரயில் பயணிகளுக்கு தித்திப்பான செய்தி.. தாம்பரத்திற்கு ஸ்பெஷல் ட்ரெயின்.. தென்னக ரயில்வே!
Trichy to Tambaram special trains

திருச்சி ரயில் பயணிகளுக்கு தித்திப்பான செய்தி.. தாம்பரத்திற்கு ஸ்பெஷல் ட்ரெயின்.. தென்னக ரயில்வே!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com