Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் காயத்துடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
Published on: August 27, 2025 at 4:00 pm
ஜம்மு, ஆக.27 2025: ஜம்மு -காஷ்மீர் மாநிலம், கத்ராவில் உள்ள அர்த்தகுமாரி அருகே மாதா வைஷ்ணவ தேவி யாத்திரைப் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 33 பேர் உயிரிழந்தனர். இதில் 25க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர்.
இடிபாடுகளில் சிக்கி இருக்கும் நபர்களை காப்பாற்றும் முயற்சியில் மீட்புக் குழுவினர் இறங்கியுள்ளனர். இதற்கிடையில், இடிபாடுகளில் பலர் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் முழுவதும் கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டது, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ஜம்முவில், பாலங்கள் இடிந்து விழுந்தன, மின் இணைப்புகள் மற்றும் மொபைல் கோபுரங்கள் கடுமையாக சேதமடைந்தன,
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியான கனமழையால் திடீர் வெள்ளம் மற்றும் நீர் தேக்கம் ஏற்பட்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை வரை 3,500க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கனமழை பதிவு
செவ்வாய்க்கிழமை (ஆக.26 2025) காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஜம்முவில் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதாவது, ஆறு மணி நேரத்திற்குள் 22 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், நள்ளிரவுக்குப் பிறகு மழை கணிசமாகக் குறைந்து, முன்னதாக, செவ்வாய்க்கிழமை, மதியம் சன்னதிப் பாதையில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது, இதில், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 21 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com