Boy trapped in borewell | மத்தியப் பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் 16 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
Boy trapped in borewell | மத்தியப் பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் 16 மணி நேரத்துக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
Published on: December 29, 2024 at 1:29 pm
Updated on: December 31, 2024 at 9:06 am
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் | மத்தியப் பிரதேசத்தின் குனா மாவட்டத்தில் ரகோகரின் ஜஞ்சலி பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மாலை 6 மணியளவில் பிப்லியா கிராமத்தை சேர்ந்த சிறுவன் சுமித் மினா என்ற 10 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான்.
தகவல் அறிந்து வந்த மீட்புக் குழுவினர் துரிதமாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் உள்ளூர் காவல்துறையின் குழுக்கள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டன. மேலும், குழந்தையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஆக்ஸிஜன் தொடர்ந்து கொடுக்கப்பட்டது.டாக்டர்கள் குழுவும் சம்பவ இடத்தில் இருந்தது.
சுமார் 39 அடி ஆழத்தில் சிக்கிய அந்த சிறுவனை மீட்க நேற்று முதல் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் வெளியே எடுக்கப்பட்டான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவன் மீட்கப்பட்டநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிறுவன் சுமித் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com