ஒடிசா: மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..10 பேர் பலி

Odisha Hospital Fire Accident: ஒடிசா மாநிலம் கட்டக் நகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Published on: March 16, 2026 at 11:08 am

புவனேஸ்வர், மார்ச் 16 2026: ஒடிசா மாநிலம் கட்டக் நகரில் உள்ள உள்ள எஸ்.சி.பி. மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் ஐ.சி.யு. பிரிவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அப்போது பலர் தீவிர சிகிச்சை பெற்று கொண்டிருந்த நிலையில் திடீரென தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். நோயாளிகளை மீட்க மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மீட்பு படையினர் தீவிரமாக போராடினர். இருப்பினும் புகை மற்றும் தீ பரவலால் காரணமாக 10 நோயாளிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

மேலும், 11 மருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்ததாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இப்தார் விருந்து அளித்த 80 வயது பிராமண பெண்.. மதத்தை வென்ற மனிதநேயம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com