supermarket Secrets: சூப்பர் மார்க்கெட்டுகளில் பால், முட்டை, பிரட் உள்ளிட்ட பொருள்களை முன்னால் வைப்பதில்லை. மாறாக பின்னால்தான் வைக்கப்பட்டிருக்கும். இதன் ரகசியம் என்ன தெரியுமா?
supermarket Secrets: சூப்பர் மார்க்கெட்டுகளில் பால், முட்டை, பிரட் உள்ளிட்ட பொருள்களை முன்னால் வைப்பதில்லை. மாறாக பின்னால்தான் வைக்கப்பட்டிருக்கும். இதன் ரகசியம் என்ன தெரியுமா?
Published on: March 15, 2025 at 2:29 pm
சூப்பர் மார்க்கெட்டுகள் இந்த காலத்தில் மிகவும் சாதாரணமாகிவிட்டன. முன்பெல்லாம் சூப்பர் மார்க்கெட்டுகள் மாநிலத்தின் தலைநகர் அல்லது மாவட்டத்தின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் தற்போது சூப்பர் மார்க்கெட் அங்காடிகள் கிராமங்களில் கூட காணப்படுகின்றன. கிராமங்கள் என்றால் நகரமயமாக்கப்பட்ட நிலையில் உள்ள கிராமங்களில் கூட இந்த சூப்பர் மார்க்கெட்டுகள் காணப்படுகின்றன.
நாம் தற்போது இந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் கடைபிடிக்கப்படும் ஒரு ரகசியம் ஒன்றை பார்ப்போம்.
பொதுவாக மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட்டுக்குள் செல்லும்போது அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு இடங்களில் இருக்கும். குறிப்பாக நாம் முதலில் பார்க்கும் இடங்கள் தொடங்கி சூப்பர் மார்க்கெட்டுக்கு பின்னால் உள்ள இடங்கள் வரை ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு விதமாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
இதையும் படிங்க : பாகற்காய் பெயர் வந்தது எப்படி தெரியுமா? தமிழனின் வேற லெவல் சம்பவம்
இந்த சூப்பர் மார்க்கெட், பால் மற்றும் பிரட் உள்ளிட்ட பொருட்கள் பின்னால் வைக்கப்பட்டிருக்கும். இது ஏன் என எப்போதாவது நீங்கள் சிந்தித்தது உண்டா? இதற்குப் பின்னால் நிபுணர்கள் இரண்டு விதமான காரணங்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
குளிர்ச்சியான காலநிலையில் வைத்திருக்க..
இதில், பால் மற்றும் முட்டை போன்ற பொருட்களை கடையில் பின்புறத்தில் வைத்திருக்க குளிர்ச்சியை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதற்காகத்தான் இந்தப் பொருட்கள் கடையின் பின்புறத்தில் வைக்கப்படுகின்றன என்கிறார்கள் நிபுணர்கள். மளிகை கடைகளின் ரகசிய வாழ்க்கை என்ற புத்தகத்தின் ஆசிரியரான பெஞ்சமின் என்பவரும் இதனை கூறியுள்ளார்.
விற்பனையை அதிகரிக்க..
பால், முட்டை, பிரெட் போன்ற பொருட்களை சூப்பர் மார்க்கெட் கடைகளின் பின்புறத்தில் வைத்திருப்பதற்கு மற்றொரு காரணமாக விற்பனை அதிகரிப்பு கூறப்படுகிறது. அதாவது இந்த அத்தியாவசியமான பொருட்களை வாங்க நீங்கள் கடையில் பின்புறத்திற்கு செல்லும் போது உங்கள் கண்களில் படும் மற்ற பொருட்களையும் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். இதனால் கடையில் விற்பனை அதிகரிக்கும் என இந்த புணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதையும் படிங்க: தலைமுடி ஆரோக்கியம், உடல் பளபளப்பு; ஒரு டம்ளர் காய்கறி சாறில் இத்தனை நன்மைகளா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com