Lifestyle hormones: இந்த காதல் பருவத்தில், உங்கள் உணர்வுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வோம். ஆம். உங்கள் ஹார்மோன்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன.
Lifestyle hormones: இந்த காதல் பருவத்தில், உங்கள் உணர்வுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலைப் புரிந்துகொள்வோம். ஆம். உங்கள் ஹார்மோன்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன.
Published on: March 13, 2025 at 12:07 pm
ஒருவரின் ஹார்மோன்கள் உடல்நலத்தையும் வாழ்வையும் மட்டும் அல்லாமல், அன்றாட உறவுகளையும் அனுபவங்களையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒருவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி, சோகம் மற்றும் அவருக்குள் ஏற்படும் உணர்வுகள் மற்றும் பிரதிபலிப்புகள் அனைத்தும் எதனுடன் இணைக்கப்பட்டுள்ளன என தெரியுமா?
ஒருவர் மீது ஈர்ப்பும் உடனடி தொடர்பும் ஏற்பட காரனம் என்ன? உங்கள் அன்புக்குரியவர் கஷ்டப்பட்டால் நீங்களும் சோகமாக உணர காரனம் என்ன? ஏதே ஒரு பிரட்சனை காரனமாக மன அழுத்தம் நிறைந்த நாற்களுக்கு பிறகு சோர்வாக உணர்கிறீர்களா? இது போன்ற எல்லாவற்றிற்கும் ஹார்மோன்களை தான் குறை கூற வேண்டும். ஆம்! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் ரெட்க்ளிஃப் லேப்ஸின் தலைமை நோயியல் நிபுணர் டாக்டர் மயங்கா லோதா சேத் பகிர்ந்து கொள்கிறார்.
இதையும் படிங்க: தலைமுடி ஆரோக்கியம், உடல் பளபளப்பு; ஒரு டம்ளர் காய்கறி சாறில் இத்தனை நன்மைகளா?
முதலில் காதல் பருவத்தின் போது ஒருவருக்கு ஏற்படும் உணர்வுகளுக்குப் பின்னால் அறிவியல் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். “காதல் ஹார்மோன், ஆக்ஸிடாசின் என்றும் அழைக்கப்படுகிறது”. இந்த ஹார்மோன் உங்கள் உணர்ச்சிப் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்கும், நீங்கள் மேலும் இணைந்திருப்பதை உணர வைக்கிறது.
உங்கள் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களின் பட்டியலில் அடுத்தது டோபமைன். இது உங்கள் மூளையில் உள்ள ரசாயனமாகும். டோபமைன் உந்துதலையும் மகிழ்ச்சியையும் தூண்டுகிறது. இருப்பினும். கதையில் வில்லன் யார் என்று நீங்கள் உணர்ந்தால் – மன அழுத்தம் அல்லது சோகத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் தான். இதற்கு கார்டிசோல் என்று பெயர். இந்த கார்டிசோல் சீரான உணர்வுகளுக்கு சிறிது அவசியம். ஆனால் கார்டிசோல் அதிகரித்தால் பதட்டம், சோர்வு அல்லது தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது.
ஹார்மோன்களின் சமநிலை
ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு சமநிலையான ஹார்மோன்கள் மிகவும் அவசியம். உடல் ஹார்மோன்கள் ஒத்திசைவில் இருந்து விலகும் போது அவை மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை, எடை அதிகரிப்பு, சோர்வு, கவனம் செலுத்தாமை அல்லது கவனம் செலுத்துவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்த தொடங்குகின்றன.
ஆரோக்கியமான உறவுக்கு தேவையான ஹார்மோன்
உங்கள் உடல் செயல்பாடுகளை ஹார்மோன்கள் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இந்த ஹார்மோன்கள் ஒவ்வொருவருக்கும் அவசியம். இதன் மூலமே ஒருவரை மதிப்பிட முடியும். உங்கள் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கும் தைராய்டு ஹார்மோன்களும் இதில் அடங்கும். மேலும் டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட பிற ஹார்மோன்கள் தசை வலிமை, ஆற்றல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பாதிக்கின்றன.
ஹார்மோன் நிலைகளை சரிபார்த்தல்
உங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவும் எளிய இரத்தப் பரிசோதனைகள் மூலம் உடலுக்குள் நடப்பதை கண்டறிந்து உங்கள் ஆரோக்கியத்தை மதிப்பிட முடியும்.
இதையும் படிங்க : பாகற்காய் பெயர் வந்தது எப்படி தெரியுமா? தமிழனின் வேற லெவல் சம்பவம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com