Paracetamol | ஆகஸ்ட் மாத தர ஆய்வில் பாராசிட்டமால் உள்ளிட்ட 50 மாத்திரைகள் தோல்வி அடைந்துள்ளன.

February 17, 2025
Paracetamol | ஆகஸ்ட் மாத தர ஆய்வில் பாராசிட்டமால் உள்ளிட்ட 50 மாத்திரைகள் தோல்வி அடைந்துள்ளன.
Published on: September 26, 2024 at 9:45 pm
Paracetamol | மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) தனது சமீபத்திய மாதாந்திர அறிக்கையில், “50 க்கும் மேற்பட்ட மருந்துகளை தரமான தரம் இல்லை என்று தெரிவித்துள்ளது. மேலும், இந்த மாத்திரைகள் குறித்து அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
இந்தப் பட்டியலில் வைட்டமின் சி மற்றும் டி3 மாத்திரைகள், ஷெல்கால், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி சாப்ட்ஜெல்ஸ், ஆன்ட்டி ஆசிட் பான்-டி, பாராசிட்டமால் உள்ளிட்ட மாத்திரைகளும் வருகின்றன. இது தவிர பல்வேறு மருந்துகளை அடையாளம் கண்டுள்ளது. அதில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த மருந்துகளும் வருகின்றன.
இந்த மருந்துகள், அல்கேம் லேபரட்டரீஸ், ஹிந்துஸ்தான் ஆன்டிபயாடிக்ஸ் லிமிடெட், ஹெட்டெரோ லேப்ஸ் லிமிடெட், கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், நெஸ்டர் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட், பிரியா பார்மாசூட்டிகல்ஸ் மற்றும் ஸ்காட்-எடில் பார்மசியா லிமிடெட் உள்ளிட்டவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
சி.டி.எஸ்.சி.ஓ (CDSCO) ஒவ்வொரு மாதமும் தரமான தரம் இல்லாத மருந்துகளின் பட்டியலை வெளியிடுகிறது. இந்த மாதாந்திர வெளியீடானது, பொதுமக்களுக்கு தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தற்போது ஆகஸ்ட் மாதத்துக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், பாண்டிச்சேரி, தெலங்கானா, டெல்லி, உத்தரகாண்ட், மேற்கு வங்கம், அந்தமான் நிக்கோபார், தாதர் மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ மற்றும் லட்சத்தீவுகள் ஆகியவை தரவுகளை சமர்ப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கருத்தரிக்க எப்படி தாம்பத்தியம் கொள்வது? ஆய்வுகள் கூறுவது என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com