தினமும் கோதுமை ரொட்டியா? உடனே நிறுத்துங்க.. ஊட்டச்சத்து நிபுணர்கள்!

Wheat roti: தினமும் கோதுமை ரொட்டி சாப்பிடுவதை கைவிடலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.

Published on: January 16, 2026 at 2:10 pm

சென்னை, ஜன.16, 2026: இந்திய குடும்பங்களில் ரொட்டி ஒரு முக்கிய உணவாக உள்ளது. எனினும், அனைத்து ரொட்டிகளும் ஒரே மாதிரி அல்ல. முழு கோதுமை, மல்டிகிரெயின், கேழ்வரகு போன்ற பல்வேறு வகை ரொட்டிகள் தனித்தனி சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகின்றன.

அந்த வகையில், எந்த ரொட்டி எந்த உணவுப் பழக்கத்திற்கு ஏற்றது என்பதை மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் குஷி சாப்ரா விளக்கியுள்ளார். இவர், ஜனவரி 14ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பல்வேறு ரொட்டி வகைகள் மற்றும் அவை சமநிலையான, ஆரோக்கியமான உணவுக்குத் தரும் பங்களிப்புகளைப் பற்றி பகிர்ந்துள்ளார்.

அதில், “நீங்கள் இன்னும் தினமும் அதே கோதுமை ரொட்டியை சாப்பிட்டு வருகிறீர்களா? அதை மாற்றுவோம்! உங்கள் ‘அட்டா’ தேர்வு உங்கள் ஆரோக்கிய இலக்குகளை அடைய பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. ஊட்டச்சத்து விஷயத்தில் ‘ஒன்றே அனைவருக்கும்’ என்ற நடைமுறை பொருந்தாது. எடை குறைப்பு, பி.சி.ஓ.எஸ். மேலாண்மை, நீரிழிவு கட்டுப்பாடு அல்லது செரிமானத்தைச் சீர்செய்தல் போன்ற எந்த இலக்காக இருந்தாலும், உங்கள் உடல் தன்மைக்கு ஏற்ற ரொட்டி வகை ஒன்று உள்ளது,” என்று தெரிவித்துள்ளார். மேலும், ராகி ரொட்டி, பார்லி ரொட்டி உள்ளிட்டவற்றையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

இதையும் படிங்க: குளிர்காலத்தில் வேகமாக பரவும் தொற்றுகள்? ஏன் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com