டெல்லியில் இந்திய பாரம்பரிய இசை விழா.. இன்று தொடக்கம்!

Bhilwara Sur Sangam 2026: எல்.என்.ஜே பில்வாரா குழுமம், இந்திய பாரம்பரிய இசை விழா ‘பில்வாரா சுர் சங்கம்’-இன் 13வது பதிப்பை அறிவித்துள்ளது.

Published on: April 4, 2026 at 10:40 am

புதுடெல்லி, ஏப்.4, 2026: டெல்லியில் பாரம்பரிய இசை விழா ‘பில்வாரா சுர் சங்கம்’ இன்றும் (ஏப்.4, நாளையும் (ஏப்.5) நடக்கிறது. இந்த விழா, ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசை மரபுகளை ஒரே மேடையில் கொண்டாடுவதன் மூலம் இந்தியாவின் ஆழமான இசை பாரம்பரியத்தை பாதுகாக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ பக்யேஷ் மராத்தே ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. பின்னர், புகழ்பெற்ற சரஸ்வதி வீணை வித்தகர் டாக்டர் ஜயந்தி குமரேஷ் அவர்களின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து, ஏப்ரல் 5, மாலை 5:30 மணிக்கு ஸ்ரீ சமன்வே சர்கார் அவர்களின் சித்தார் நிகழ்ச்சியும், புகழ்பெற்ற பண்டிட் முகுல் சிவ்புத்ரா அவர்களின் குரல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழாவின் முக்கியத்துவம்

பாரம்பரிய இசை மரபுகளை தலைமுறைகளுக்கு பாதுகாக்கும் நோக்கில், எல்என்ஜே பில்வாரா குழுமம் ஆண்டுதோறும் இந்த விழாவை நடத்துகிறது. இந்நிலையில், 2026 பதிப்பு, இசை ரசிகர்கள், கலாச்சார ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்களை பெருமளவில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்என்ஜே பில்வாரா குழுமம்

எல்என்ஜே பில்வாரா குழுமம் ஆறு தசாப்தங்களுக்கு மேலான பாரம்பரியத்தைக் கொண்ட பன்முகத் தொழில்துறை குழுமம் ஆகும். இது, துணிநூல், கிராஃபைட் எலக்ட்ரோடுகள், மின்சாரம் போன்ற துறைகளில் முன்னணி வகிக்கிறது.
மேலும், சமூக மற்றும் கலாச்சார பங்களிப்பில் ஆழமாக ஈடுபட்டு, இந்திய பாரம்பரிய கலைகளை பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கருப்பு உடை, வைர நெக்லஸ்.. கவர்ச்சியாக தோன்றிய ராதிகா மெர்சென்ட்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com