paneer vs eggs: நம்மில் பலரும் உணவுப் பொருள்களில் பன்னீர் மற்றும் முட்டையை எடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில், எதில் புரதச் சத்து எனப்படும் புரோட்டீன் அதிகம் என்பது குறித்து பார்க்கலாம்.
paneer vs eggs: நம்மில் பலரும் உணவுப் பொருள்களில் பன்னீர் மற்றும் முட்டையை எடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில், எதில் புரதச் சத்து எனப்படும் புரோட்டீன் அதிகம் என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: May 6, 2025 at 2:17 pm
சென்னை, மே 5 2025: பன்னீர் மற்றும் முட்டை இரண்டும் வேறுபட்டவை என்றாலும், இரண்டும் புரதம் மற்றும் பல மேக்ரோநியூட்ரியண்ட்களால் நிரம்பிய ஊட்டச்சத்து மையங்களாக உள்ளன. இவை ஆரோக்கியமாகவும், நிறைவாகவும், உற்சாகமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இந்நிலையில், நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் இரண்டையும் சாப்பிடலாம்.
ஆனால் சைவ உணவு உண்பவர்கள் முட்டைகளைத் தவிர்ப்பார்கள். அதனால்தான் அவர்களுக்கு புரதம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அந்த வகையில், பன்னீரில் புரதச் சத்து மிகுந்து காணப்படுகிறது. ஆக, முட்டை எடுத்துக் கொள்ளாதவர்கள் புரதச் சத்துக்காக பன்னீரை எடுத்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க :கொதிக்கும் கோடை வெயில்: ஆண், பெண் தினமும் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்?
எதில் புரதச் சத்து அதிகம்?
இந்நிலையில், பன்னீர் மற்றும் முட்டை இரண்டிலும் உள்ள புரத சத்தை முதலில் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதற்கு, அவற்றை முதலில் சம அளவில் அளவிட வேண்டும். அந்த வகையில், 2 முட்டைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாக கிட்டத்தட்ட 14 கிராம் புரதச் சத்து கிடைக்கின்றது.
அதேசமயம் 100 கிராம் பனீரிலும் அதே அளவு புரதச் சத்து உள்ளது. எனவே, இந்த இரண்டு உணவுகளும் புரத உள்ளடக்கத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை ஆகும்.
இதையும் படிங்க :பாத்ரூமில் மொபைல் போன் யூஸ் பண்ணுவீர்களா? மூலநோய் பாதிக்கும் அபாயம்.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com