Pilots: விமானிகள் பெரும்பாலும் நீண்ட தாடிகள் வைப்பது இல்லை. இது ஏன் தெரியுமா? இதற்கும் பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது.
Pilots: விமானிகள் பெரும்பாலும் நீண்ட தாடிகள் வைப்பது இல்லை. இது ஏன் தெரியுமா? இதற்கும் பாதுகாப்புக்கும் என்ன தொடர்பு உள்ளது.
Published on: May 4, 2025 at 4:36 pm
Updated on: May 4, 2025 at 4:37 pm
சென்னை மே 4 2025: பொதுவாக எந்த விமானிகளும் தாடி வைப்பது இல்லை. இது குறித்து பலருக்கும் சந்தேகங்கள் இருக்கலாம். விமானிகள் ஏன் தாடி வைப்பது இல்லை?
இதற்குப் பின்னால் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. பொதுவாக விமானிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதற்காக அவர்கள் ஆக்சிஜன் முக கவசம் அணிய வேண்டியது இருக்கும்.
இது சீரான செயல்பாட்டுக்கு உறுதுணையாக இருக்கும். மேலும் அந்த ஆக்ஸிஜன் முக கவசமும் பிட்டாக இருக்க வேண்டியதும் அவசியம். இதனால் விமானிகள் தாடி வைப்பது இல்லை.
அதாவது நீளமான தாடி இருந்தால் ஆக்சிஜன் முக கவசம் வைப்பதில் சிரமம் ஏற்படும். இந்த சிரமத்தை தவிர்க்கவே விமானிகள் நீண்ட தாடி வைப்பதை விரும்புவதில்லை. அதாவது தாடி அதிக அளவில் வளர்ந்திருந்தால் ஆக்சிஜன் முக கவசம் வைக்கும் போது கசிவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆக்சிஜன் முக கவசத்தை பொருத்தவரை பிட்டிங் ஆக இருக்க வேண்டும். இதனால்தான் விமானிகள் பெரும்பாலும் நீண்ட தாடிகள் வைப்பதில்லை.
மேலும் இதனை உறுதி செய்யும் பொருட்கள் விமான நிறுவனங்களும் விமானிகள் நீண்ட தாடிகள் வைப்பதை அனுமதிப்பதில்லை. இது தொடர்பாக கொள்கை முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விவரம் அறிந்த வட்டாரங்கள், ” ஆக்சிஜன் முக கவசத்தில் இயக்காரணம் கொண்டும் ஒரு சிறிய அளவு கசிவு கூட இருக்கக் கூடாது; இது விமானிகள் மற்றும் பயணிகளின் உயிர் சார்ந்த விஷயம்.
ஆகவே இந்த விஷயத்தில் விமான நிறுவனங்களும் கூடுதல் கவனம் செலுத்துகின்றன” என்கின்றன.
இதையும் படிங்க: காதலின் சின்னம் தாஜ்மஹால் இன்று கட்டப்பட்டால்.. எவ்வளவு செலவாகும்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com