International Workers’ Day 2025: தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களை கௌரவிக்கும் வகையில் உலகத் தொழிலாளர் தினம், மே 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
International Workers’ Day 2025: தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களை கௌரவிக்கும் வகையில் உலகத் தொழிலாளர் தினம், மே 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
Published on: April 29, 2025 at 1:02 pm
உலகத் தொழிலாளர் தினம், மே 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினம் கடின உழைப்பாளிகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள மக்களின் நினைவாக உறுவானது. மேலும் தொழிலாளர்களின் உரிமைகள், சமூக நீதி மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் நாளாகும். பல நாடுகளில் இது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட விடுமுறையாகும்.
சர்வதேச தொழிலாளர் தினம் மே 1, 2025 வியாழக்கிழமை அனுசரிக்கப்படும். இது தொழிலாளர்களின் பங்களிப்புகள் மற்றும் தொழிலாளர் இயக்கங்களை கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படும். இது ஒரு சர்வதேச நிகழ்வாக மாறியுள்ளது, பேரணிகள், அணிவகுப்புகள், உரைகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுடன் கொண்டாடப்படுகிறது.
பொது விடுமுறை இருக்கும் நாடுகள்:
மே 1 ஆம் தேதி பொது விடுமுறையாக இருக்கும் நாடுகள் இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உட்பட 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் – மே 1 ஆம் தேதி தேசிய விடுமுறை.
இதையும் படிங்க : காதலின் சின்னம் தாஜ்மஹால் இன்று கட்டப்பட்டால்.. எவ்வளவு செலவாகும்?
பொதுவான பண்புகள்:
ஒவ்வெரு நாட்டின் மரபுகள் வேறுபடலாம் ஆனால் அவை பின்வரும் பொதுவான பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
பொது விடுமுறை இல்லாத நாடுகள்:
உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆச்சரியப்படும் விதமாக, மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதில்லை. மே 1 ஆம் தேதி உலகத் தொழிலாளர் தினத்தை அனுசரிக்கிறதற்குப் பதிலாக, சில நாடுகள் வேறு நாட்களில் தொழிலாளர்களுக்கான விழாக்களை நடத்துகின்றன. அல்லது கொண்டாடுவதும் இல்லை.
உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த நாளை பொது விடுமுறை நாளாகக் கொண்டாடினாலும், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் அவ்வாறு கொண்டாடுவதில்லை.
தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவம்:
இந்த நாள், தொழிலாளர்களின் போராட்டங்கள், சம்பள உரிமைகள், வேலை நேரக் கட்டுப்பாடுகள் போன்ற முக்கிய அம்சங்களை நினைவுபடுத்துகிறது. உலகளாவிய முறையில் இது தொழிலாளர்களின் நலனுக்காக நடத்தப்படும் விழிப்புணர்வு நாளாகும்.
இதையும் படிங்க : Akshaya Tritiya 2025: அக்ஷய திருதியை தேதி என்ன? பூஜை செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com