கேரள பழம் புரி ஸ்வீட்: வெங்கடேஷ் பட் ஸ்டைலில் இப்படி பண்ணுங்க!

Palam Puri | கேரளத்தில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று பழம் புரி. இது கேரளத்தின் அருகாமை மாவட்டமான நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் கிடைக்கும். இதனை தமிழர்கள் பழ பஜ்ஜி என்றும் அழைப்பார்கள்.

Published on: September 1, 2024 at 9:35 am

Palam Puri | கேரளத்தில் மிகவும் பிரபலமான இனிப்பு வகைகளில் ஒன்று பழம் புரி. இது கேரளத்தின் அருகாமை மாவட்டமான நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளிலும் கிடைக்கும். இதனை தமிழர்கள் பழ பஜ்ஜி என்றும் அழைப்பார்கள்.

இந்த கேரள பழம் புரியை பிரபல சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட் ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது மிகவும் சுவையான மற்றும் எளிமையாக செய்யக்கூடிய ஒரு இனிப்பு வகையாகும்.

தேவையான பொருட்கள்

நேந்திர வாழைப்பழம்- 2
மைதா மாவு – 200 கிராம்
அரிசி மாவு – 50 கிராம்
ஆப்ப சோடா -1/2 ஸ்பூன்
சர்க்கரை -50 கிராம்
உப்பு- தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை

முதலில் மைதா மாவு, அரிசி மாவு, ஆப்ப சோடா, சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மாவினை கலந்து விட வேண்டும். பின்னர் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி விளாமல் நன்கு கலந்து பஜ்ஜி பதத்தில் தயார் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையினை நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நேந்திர வாழைப்பழத்தை நீலவாக்கில் இரண்டு அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்தவுடன் வெட்டி வைத்த வாழைப்பழத்தினை ஊறவைத்த மாவு கலவையில் முக்கி பஜ்ஜி போடுவது போல் போட்டு எடுக்க வேண்டும்.

இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான பழம் புரி தயார்.

இதையும் படிங்க 1 கிலோ அரிசி, மட்டனில் பாய் வீட்டு ஆம்பூர் பிரியாணி: இப்படி செய்து பாருங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com