நச்சுன்னு ஒரு நண்டு மசாலா.. இப்படி செஞ்சு அசத்துங்க!

Food: அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய நண்டு மசாலா இந்த முறையில் ட்ரை பண்ணுங்க.

Published on: March 12, 2026 at 9:00 am

Updated on: March 11, 2026 at 9:41 pm

சென்னை, மார்ச் 12, 2026: சுவையான நண்டு மசாலா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நண்டு- அரை கிலோ
வெங்காயம் – 100 கிராம் (நறுக்கியது)
தக்காளி – 100 கிராம் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 4 (கீறியது) மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியாத்தூள்-2 டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் தேங்காய்-அரை மூடி இஞ்சி – சிறுதுண்டு பூண்டு – 4 பல் கறிவேப்பிலை சிறிதளவு.
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். தேங்காய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை வாணலியில் பொன்னிறமாக வறுத்து அரைத்து எடுக்க வேண்டும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்பு வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.

அதன் பிறகு மிளகாய் தூள், தனியாத்தூள் மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றுடன் அரைத்த தேங்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நண்டை போட்டு மசாலாவுடன் கலந்து வேகவிடவும். இவை வெந்து கெட்டியாக வந்ததும் இறக்கினால் சுவையான நண்டு மசாலா ரெடி.

இதையும் படிங்க: வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டிலேயே குளிர்ச்சியான ரோஸ் மில்க் செய்யலாம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com