How to make mutton Biryani | ஹோட்டல் ஸ்டைலில் உதிரி உதிரியாக சுவையான மட்டன் பிரியாணி குக்கரில் எப்படி செய்யலாம் என்று தெரியுமா?
How to make mutton Biryani | ஹோட்டல் ஸ்டைலில் உதிரி உதிரியாக சுவையான மட்டன் பிரியாணி குக்கரில் எப்படி செய்யலாம் என்று தெரியுமா?
Published on: October 31, 2024 at 10:30 am
How to make mutton Biryani | குக்கரில் மட்டன் பிரியாணி குழையாமல் உதிரி உதிரியாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் -1/2 கிலோ, இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டீஸ்பூன்
உப்பு -1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் -1/2 டீஸ்பூன்
பிரியாணி மசாலா -1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் -1/2 டீஸ்பூன்
மிளகு தூள் -1/4 டீஸ்பூன்
தண்ணீர் -1/4 கப்
தேங்காய் எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
நெய் -1 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை -1
ஏலக்காய் -2
கருப்பு ஏலக்காய்-1
பட்டை -1
நட்சத்திர சோம்பு-1
கிராம்பு -3
ஜாவித்திரி-1
பெரிய வெங்காயம்- 2
தக்காளி -1
புதினா இலை – 1 கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலை -1/2 கைப்பிடி அளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
பிரியாணி மசாலா – 1 டீஸ்பூன்
சீரகத்தூள் -1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் -1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தயிர் – 2 டேபிள் ஸ்பூன், பாஸ்மதி அரிசி – 1 கப்
செய்முறை
ஒரு குக்கரில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் , உப்பு, மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், பிரியாணி மசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் கால் கப் தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் குக்கரை மூடி ஐந்து முதல் ஆறு விசில் வைக்க வேண்டும். குக்கரில் ஆவி முழுவதும் வெளியேறிய பின்னர் மட்டன் வெந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.
ஒருவேளை மட்டன் வேக வில்லை என்றால் மேலும் 2 விசில் வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் சூடானதும் அதனுடன் பிரியாணி இலை, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், பட்டை, நட்சத்திர சோம்பு, கிராம்பு, ஜாவித்திரி சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.
இதனுடன் 2 டேபிள் ஸ்பூன் புதிதாக அரைத்த இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை நீங்கும் வரை வதக்க வேண்டும். இதனுடன் ஒரு பழுத்த தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு கலந்து தொக்கு பதத்திற்கு வந்த பிறகு இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கழுவி சுத்தம் செய்து எடுத்த புதினா இலைகளையும் அரை கைப்பிடி அளவு கொத்தமல்லி இலையும் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா, சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அடுப்புத்த தீயை சிம்மில் வைத்து வதக்க வேண்டும். அதனுடன் புளிக்காத தயிர் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்னர் இதனுடன் அவித்த மட்டன் துண்டுகளை மட்டும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட வேண்டும். இதனுடன் மட்டன் அவித்த தண்ணீர் அரை கப் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
1 கப் பாஸ்மதி அரிசிக்கு 1,1\2 கப் தண்ணீர் சரியான அளவு ஆகும். தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அரை மணி நேரம் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை இதனுடன் சேர்த்து அரிசி உடையாமல் லேசாக கிளறி விட வேண்டும். இந்த தருணத்தில் உப்பு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும். உப்பு தூக்கலாக இருக்க வேண்டும். அப்போதுதான் சாதத்துடன் சேர்ந்து சரியாக இருக்கும். பின்னர் அடுப்பு தீயை ஹை ஃப்ளேமில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
ஒரு கொதி வந்த பிறகு அடுப்புத் தீயை மீடியம் பிளேவில் வைத்து குக்கரை மூடி போட்டு மூட வேண்டும். பின்னர் மீடியம் டு ஹை ஃபிளேமில் வைத்து ஒரு விசில் வைக்க வேண்டும். ஒரு விசில் வந்த பிறகு அடுப்புத்தீயை லோ பிளேமில் வைத்து 3 நிமிடம் அப்படியே விட வேண்டும். பின்னர் அடுப்பை ஆப் செய்து குக்கரின் ஆவி முழுவதுமாக வெளியேறியதும் மூடியை திறந்து அரிசி உடையாமல் எடுத்து பரிமாறவும். இப்போது கமகமக்கும் உதிரியான மட்டன் பிரியாணி தயார்.
இதையும் படிங்க : அரை கிலோ மட்டனில் செட்டிநாட்டு ஆட்டுக்கறி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com