ருசியான கொள்ளு துவையல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
ருசியான கொள்ளு துவையல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
Published on: November 27, 2024 at 12:25 pm
Kollu Thuvaiyal | சாதத்திற்கு எப்போதும்போல இல்லாம இந்த கொள்ளு துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சாதத்தோட சுவை அள்ளும்.
தேவையான பொருள்கள்
கொள்ளு – 125 கிராம்
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன்
வர மிளகாய் -10 (காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்)
பூண்டு -7 பல்லு
புளி – சிறிய எலுமிச்சை அளவு
துருவிய தேங்காய் – அரை கப்
கல் உப்பு -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
தாளிதம் தயார் செய்ய
கடுகு
சீரகம்
கருவேப்பிலை
செய்முறை
ஒரு கடாயில் கொள்ளு சேர்த்து அடுப்பு தீயை லோ ஃப்லேமில் வைத்து கொள்ளு பொன்னிறமாக மாறும் வரை வறுக்க வேண்டும். கொள்ளிலிருந்து அருமையான மனம் வந்து பொன்னிறமாக மாறும் வரை பொறுமையாக கிளறிவிட்டு வறுக்க வேண்டும். கொள்ளு வறுபட்ட பின்னர் வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடலைப்பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து லோ ஃப்ளேமில் வறுக்க வேண்டும். பின்னர் இதனுடன் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து வறுக்கவும். அடுப்பு தீயை லோ ஃப்ளேமில் வைத்து இதனுடன் சிறிய எலுமிச்சை அளவு புளி துருவிய தேங்காய் மற்றும் கல் உப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இறுதியாக இதனுடன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறிவிட்டு வேறு பாத்திரத்தில் மாற்றவும்.
இவை ஆரிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் கொள்ளு மற்றும் வறுத்த கலவையை சேர்த்து முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். இந்து சமயத்தில் உப்பு காரம் சரிபார்த்துக் கொள்ளவும். தண்ணீர் அதிகமாக சேர்த்தால் சட்னி பதத்திற்கு மாறிவிடும் எனவே சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் போதுமானது.
பின்னர் இதனை வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். தாளிதம் தயார் செய்ய ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சிறிது கடுகு, சீரகம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிதம் தயார் செய்து ஏற்கனவே தயார் செய்து வைத்த துவையலில் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். இப்போது சுவையான கொள்ளு துவையல் தயார். இதை சுடு சோறுடன் சேர்த்து நெய்விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
இதையும் படிங்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 5 உணவுகள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com