Food: காரசாரமான கருவாட்டு குழம்பு இந்த முறையில் செய்து பாருங்க மிகவும் சுவையாக இருக்கும்.
Food: காரசாரமான கருவாட்டு குழம்பு இந்த முறையில் செய்து பாருங்க மிகவும் சுவையாக இருக்கும்.

Published on: December 17, 2025 at 2:35 pm
சென்னை, டிச.17, 2025: அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான கருவாட்டு குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கருவாடு – 10
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் -¼ டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
பூண்டு – 1 கைப்பிடி அளவு
சின்ன வெங்காயம் -1 கப்
தக்காளி -2
மஞ்சள் தூள் ¼ டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1½ டேபிள் ஸ்பூன்
மல்லித்தூள் -3 டேபிள் ஸ்பூன்
புளி – 1 பெரிய எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கருவாட்டில் உள்ள செதில்களை நீக்கி இரண்டு மூன்று முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்து, வெந்தயம் மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி அளவு பூண்டினை ஒன்று இரண்டாக தட்டி சேர்க்க வேண்டும்.
பூண்டு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பின்னர் இதனுடன் ஒரு கப் அளவு ஒன்று இரண்டாக தட்டிய அல்லது சிறிது சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை நன்கு வதக்க வேண்டும். வெங்காயம் நிறம் மாறிய பின்னர் இதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசிந்து வந்த பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து கலந்து விடவும்.
பின்னர் இதனுடன் ஒரு பெரிய எலுமிச்சை அளவு புளியைக் கரைத்து இதனுடன் சேர்த்து கலந்து விடவும். குழம்புக்கு தேவையான தண்ணீர் சேர்த்து மசாலாவின் பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்க விடவும். பின்னர் இதனுடன் சுத்தம் செய்து வைத்த கருவாட்டுத் துண்டுகளை சேர்க்கவும். குழம்புக்கு தேவையான உப்பு சரி பார்த்துக் கொள்ளவும். கருவாட்டினை சேர்த்த பின்னர் ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவிடவும். இப்போது சுவையான கருவாட்டு குழம்பு தயார்.
இதையும் படிங்க : பத்தே நிமிடத்தில் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெஜ் பிரைடு ரைஸ்.. வீட்டிலேயே செய்யும் வழிமுறை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com