மைதா சேர்க்காமல் சுவையான ஹெல்தி ஸ்நாக்ஸ்.. செய்து பாருங்க!

Food: ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வரும் குழந்தைக்கு இந்த ஹெல்தியான ஸ்நாக்ஸை செய்து கொடுங்கள்.

Published on: March 19, 2026 at 10:13 am

சென்னை, மார்ச் 19, 2026: மைதா சேர்க்காமல் ஹெல்தியான ஸ்நாக்ஸ் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டைகோஸ் -1 கப்
கேரட் -½ கப்
பெரிய வெங்காயம் -1
குடைமிளகாய் -¼கப்
உப்பு -தேவையான அளவு
சீரகத்தூள் -1 டீஸ்பூன்
மிளகு தூள் -¼ டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
ரவை -4 டேபிள் ஸ்பூன்

அரைக்க வேண்டியவை

கொண்டைக்கடலை -1கப்
பீன்ஸ் -½ கப்
பச்சை மிளகாய் -3
இஞ்சி -1 துண்டு
பூண்டு -4 பல்லு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டைகோஸ், துருவிய கேரட், நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம், குடைமிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் எட்டு மணி நேரம் ஊற வைத்த கொண்டைக்கடலை, பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

இதை ஏற்கனவே தயார் செய்து வைத்த முட்டைகோஸ் கலவையுடன் சேர்க்கவும். பின்னர் இதனுடன் சீரகத்தூள் மிளகுத்தூள், மல்லித்தூள், மஞ்சள், தூள், ரவை சேர்த்து கலந்து வட்ட வடிவில் அல்லது சதுர வடிவில் கட்லெட் போன்று தயார் செய்யவும். ஒரு கடாயில் எண்ணெய் தடவி அதில் வெஜிடபிள் கட்லெட்டை சேர்த்து இரண்டு பக்கமும் வேக வைக்கவும். இப்போது ஹெல்தியான ஈவினிங் ஸ்னாக்ஸ் தயார்.

இதையும் படிங்க: ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் தவா ஃபிஷ் ஃப்ரை.. இப்படி ட்ரை பண்ணுங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com