Food: சுவையான நார்த் இந்தியன் ஸ்பெஷல் ஸ்டப் வெண்டைக்காய் வறுவல் வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Food: சுவையான நார்த் இந்தியன் ஸ்பெஷல் ஸ்டப் வெண்டைக்காய் வறுவல் வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: March 13, 2025 at 7:41 pm
நார்த் இந்தியன் ஸ்பெஷல் ஸ்டப் வெண்டைக்காய் வறுவல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெண்டைக்காய்- 1/2 கிலோ
எண்ணெய் -2 டீஸ்பூன்
சீரகம் -½ டீஸ்பூன்
துருவிய பூண்டு -½ டீஸ்பூன்
துருவிய இஞ்சி-½ டீஸ்பூன்
பச்சை மிளகாய்-1
பெருங்காயத்தூள் -½ டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
கடலை மாவு-1 கப்
சீரகத்தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -1 டீஸ்பூன்
சோம்புத்தூள்-½ டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
ஆம்சூர் தூள் -1 டீஸ்பூன்
உப்பு -1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை- சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம் துருவிய பூண்டு துருவிய இஞ்சி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். அடுப்பு தீயை லோ பிளேமில் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் கடலை மாவு சேர்த்து வறுக்கவும்.
கடலைமாவை வறுக்கும் பொழுது கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கடலை மாவில் இருந்து வாசம் வந்த பின்னர் இதனுடன் சீரகத்தூள் மல்லித்தூள் சோம்புத்தூள் காஷ்மீரி மிளகாய் தூள் அம்சூர் தூள் உப்பு சேர்த்து வறுக்கவும். இவை அனைத்தும் நன்கு கலந்து வறுபட்ட பின்னர் மாவினை வேறு பாத்திரத்தில் மாற்றி நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கலந்து விடவும்.
இதையும் படிங்க தட்டைபயிறு குழம்பு இப்படி வைங்க.. கறி சுவை டேஸ்ட் கிடைக்கும்!
வெண்டைக்காயை இருமுறை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு காட்டன் துணியால் துடைத்து எடுத்துக் கொள்ளவும். வெண்டைக்காயின் தலைப்பகுதியை நீக்கிவிட்டு நடுவில் மட்டும் நீல வாக்கில் கீரி ஏற்கனவே தயார் செய்து வைத்த கடலை மாவு கலவையை இதன் உள்ளே ஸ்டப் செய்ய வேண்டும். இதேபோன்று அனைத்து வெண்டைக்காயின் நடுவிலும் கீறல் இட்டு மாவினை சேர்த்து ஸ்டஃப் செய்து எடுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் தடவி அதில் தயார் செய்து வைத்த வெண்டைக்காயினை சேர்த்து வறுக்கவும். வெண்டைக்காய் வெந்ததும் திருப்பி போட்டு வேக விடவும். வெண்டைக்காய் இருபுறமும் நன்கு வறுபட்டதும் வேறு பாத்திரத்தில் மாற்றவும். இப்போது சுவையான நார்த் இந்தியன் ஸ்பெஷல் ஸ்டப் வெண்டைக்காய் வறுவல் தயார்.
இதையும் படிங்க சுவை நாவிலேயே நிற்கும் ; எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ; இப்படி செஞ்சு அசத்துங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com