Food: இந்த சம்மருக்கு சூப்பரான ஹெல்த்தி ட்ரிங்க். இந்த முறையில் செய்து பாருங்கள்.
Food: இந்த சம்மருக்கு சூப்பரான ஹெல்த்தி ட்ரிங்க். இந்த முறையில் செய்து பாருங்கள்.

Published on: March 21, 2026 at 11:21 am
சென்னை, மார்ச் 21, 2026: அவலை பயன்படுத்தி சூப்பரான ஹெல்த்தி ட்ரிங்க் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
பால் – ¾ லி
அவல் -½ கப்
பேரிச்சம்பழம் -12
பாதாம் -7
முந்திரி -5
சப்ஜா விதை -1 டீஸ்பூன்
துருவிய கேரட் -½ கப்
செய்முறை
ஒரு கடாயில் அவளை மொறுமொறுப்பாக வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் பேரிச்சம்பழம், பாதாம் மற்றும் முந்திரியுடன் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் சப்ஜா விதைகளுடன் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய கேரட்டுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும்.
ஏற்கனவே வறுத்த அவளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் ஊற வைத்த பேரிச்சம் பழம், முந்திரி மற்றும் பாதாமை தோல் நீக்கி சேர்த்து மை போன்று அழைக்கவும். பின்னர் காய்ச்சி ஆரிய பாலில் அரைத்த பேரிச்சை டேஸ்ட், சப்ஜா விதை மற்றும் கேரட் ஜூஸ் சேர்த்து கலந்து விடவும். இதனுடன் ஐஸ் கியூப் சேர்த்து பரிமாறவும். இப்போது சுவையான ஹெல்த்தி ட்ரிங்க் தயார்.
இதையும் படிங்க; நச்சுன்னு ஒரு நண்டு மசாலா.. இப்படி செஞ்சு அசத்துங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com