அடுப்பு தேவையில்லை.. சட்டுன்னு சட்னி ரெடி!

Food: அடுப்பே இல்லாமல் சட்டுன்னு செய்யலாம் சுவையான தக்காளி சட்னி.

Published on: March 20, 2026 at 9:00 am

Updated on: March 19, 2026 at 9:34 pm

சென்னை, மார்ச் 20, 2026: அடுப்பு இல்லாமல் சுவையான தக்காளி சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பழுத்த தக்காளி -3
பெரிய வெங்காயம் -2
உப்பு -சிறிதளவு
பூண்டு – 2 பல்லு
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு
மிளகாய் தூள் -3 டேபிள் ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப)
நல்லெண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்
உப்பு – சிறிதளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய பழுத்த தக்காளி பழம் சேர்க்கவும். இதனுடன் சிறிது உப்பு சேர்த்து கைகள் மூலம் நன்கு பிசைந்து மசிக்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் தட்டிய பூண்டை சேர்க்கவும். இதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விடவும்.

இந்த கலவையுடன் 3 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும். மிளகாய்த்தூள் காரத்துக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் மூன்று டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசிக்கவும். இப்போது சுவையான தக்காளி சட்னி ரெடி. இந்த சட்னி இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க: ரெஸ்டாரன்ட் சுவையில் முட்டை சில்லி.. இப்படி செஞ்சு அசத்துங்க..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com