Summer Tips: நாடு முழுக்க கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு நாளைக்கு ஆண்கள், பெண்கள் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் தெரியுமா?
Summer Tips: நாடு முழுக்க கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க ஒரு நாளைக்கு ஆண்கள், பெண்கள் எத்தனை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் தெரியுமா?
Published on: April 27, 2025 at 2:49 pm
சென்னை, ஏப்.27 2025: இந்தியாவில் கோடை காலம் தொடங்கிவிட்டது. ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலைகள் வீசத் தொடங்கிவிட்டன. இந்நிலையில், வரும் காலங்களில் நாட்டின் பல பகுதிகளில், வெப்பம் இன்னும் அதிகரிக்கக் கூடும் வானிலை ஆய்வு மைய தகவல்கள் எச்சரிக்கின்றன.
இந்த நிலையில், கோடைக் காலத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர் ஸ்ரீராம் நேனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இருதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நுரையீரல், உணவுக்குழாய் மருத்துவரான ஸ்ரீராம் நேனே, நடிகை மாதுரி தீக்ஷித்தின் கணவரும் ஆவார். இந்த நிலையில் மருத்துவர் ஸ்ரீராம், கோடை வெயிலில் இருந்து தப்பிக்க 4 வழிகளை பரிந்துரைக்கிறார். அவரின் கூற்றுப்படி, உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்க வேண்டும்.
மருத்துவரின் 4 அறிவுரைகள்
இதற்காக ஆண்கள் 3.7 லிட்டர் தண்ணீரும், பெண்கள் 2.7 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும். மேலும், நீர்ச்சத்து நிரம்பிய பழங்களை அதிகம் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.
மதியம் வெயிலில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சூரிய ஒளியின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
மேலும், வெயில் அதிகமாக இருக்கும் காலங்களில் பருத்தியிலான ஆடைகளை அணிய வேண்டும். கண்ணுக்கு குளிர்ச்சியாக சன் கிளாஸ் அணிந்துக் கொள்ளலாம்.
இது மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் மதியம் வெளியில் அதிகம் வெளியே வர வேண்டாம் எனவும் மருத்துவர் ஸ்ரீராம் நேனா தெரிவித்துள்ளார்.
வாசகர்கள் கவனத்துக்கு: இந்தச் செய்தி தகவல் நோக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது. மாறாக இது மருததுவ ஆலோசனை அல்ல. இது குறித்து, ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
இதையும் படிங்க : முக்கால் கிலோ மட்டன் போதும்.. சுட சுட சூப்பரான சுக்கா ரெடி.. இப்படி ட்ரை பண்ணுங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com