benefits of water |அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
benefits of water |அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
Published on: September 1, 2024 at 4:11 pm
benefits of water |அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் உள்ளன.
காலை எழுந்தவுடன் பெட் காஃபி அல்லது டீ குடிப்பது போன்ற பழக்கங்கள் ஏராளமானோருக்கு உள்ளது. ஆனால் இந்த பழக்கத்தினை குறித்து எதிர்மறையான தகவல்களே வெளிவந்து கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்கள் இந்த பழக்கத்தினை தவிர்க்கும் படி வலியுறுத்திகின்றனர்.
அதேநேரத்தில், காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் இப்போது பார்க்கலாம்.
நீர்ச்சத்து
தினமும் 7-8 மணி நேரம் தூங்குவதால், இரவு நேரத்தில் உடலில் நீர்ச்சத்து குறைவது இயற்கையானது. இதனால், வெறும் வயிற்றில் நிறைய தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு உடனடியாக நீரேற்றம் கிடைக்கிறது. ஆரோக்கியமான உடலிற்கு நாம் எலுமிச்சையுடன் வெதுவெதுப்பான நீரையும் குடிக்கலாம்.
உடல் புத்துணர்ச்சி
மேலும், நாம் சீராக தண்ணீர் குடித்தால் உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். இது அந்த நாளினை ஆற்றலுடன் எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
சுறுசுறுப்பாக இயங்கும் மூளை
மூளை சுறுசுறுப்பாக இயங்க போதுமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. நாம் நன்கு நீரேற்றமாக இருக்கும்போது, தெளிவாக சிந்திக்க முடியும்.
நோய் எதிர்ப்பு சக்தி
அதிகாலை எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதால் உடலில் போதுமான அளவு நீர் ஏற்றம் ஏற்பட்டு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
தலைமுடி வளர்ச்சி
உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் தோல் பளபளக்கும் என்றும் தலைமுடி நன்கு வளரும் எனவும் கூறப்படுகிறது. மேலும் உடலில் உள்ள நச்சு வெளியேறும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: சூடா ஒரு டம்ளர் நீர்; ஆமை போல் நடை: வாக்கிங் இப்படி ட்ரை பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com