30 வயதில் நரை எட்டிப் பார்க்கிறதா? கூந்தல் கருகருவென வலிமையாக இருக்க வேண்டுமா?

Amla: 30 வயதுக்கு முன் வெள்ளை முடியா? நெல்லிக்காய் பயன்படுத்தி கருப்பு, வலுவான முடியைப் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

Published on: February 14, 2026 at 1:09 pm

சென்னை, பிப்.14, 2026: இன்றைய காலகட்டத்தில் வெள்ளை முடி என்பது முதுமையை மட்டும் குறிக்கவில்லை. மன அழுத்தம், மாசு , சீரற்ற உணவு பழக்கம், தூக்கமின்மை, ரசாயன சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படுகிறது. இதனால், 20 மற்றும் 30 வயதிலேயே முன்கூட்டிய வெள்ளை முடி ஏற்படுகிறது. இந்த நிலையில், ஹேர் டைகள் உடனடியாக வெள்ளை முடியை மறைக்க உதவினாலும், நீண்ட காலத்தில் முடி வேர் பலவீனமடைய காரணமாக அமைகின்றன.

அதாவது, முடி மெல்லியதாகி, முறிவு மற்றும் அதிக உதிர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இயற்கையாக முடியை சரிசெய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்

முடி ஆரோக்கியத்திற்கு சக்திவாய்ந்த மூலிகையாகக் நெல்லிக்காய் கருதப்படுகிறது. இதில், வைட்டமின் C, இரும்புச் சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது, தலைமுடிக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது.
மேலும், முடி வேர் வலுப்படுத்துகிறது. தொடர்ந்து, இயற்கையான முடி நிறத்திற்குப் பொறுப்பான மெலனின் உற்பத்தியை ஆதரிக்கிறது. தொடர்ந்து, வெள்ளை முடி பிரச்சினை உள்ளவர்களுக்கு உதவுகிறது. வேர் பகுதியில் முடி மெல்லியதாகும் பிரச்சினையை குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 2026 மகா சிவராத்திரி.. பூஜை, விரத தினங்கள்.. முழு விவரம்!

குழந்தைகளின் பாதுகாப்பு கேடயம் தாய்ப்பால்.. முதல் தாய்ப்பால் வங்கி.. யார் இந்த மருத்துவர் ஆர்மிடா?
First human milk bank

குழந்தைகளின் பாதுகாப்பு கேடயம் தாய்ப்பால்.. முதல் தாய்ப்பால் வங்கி.. யார் இந்த மருத்துவர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com