Akshaya Tritiya 2025: அக்ஷய திரியை பூஜைக்கு உகந்த நேரம் எது தெரியுமா? 2025ஆம் ஆண்டு அக்ஷய திருதியை ஏப்ரல் 30ஆம் தேதி வருகிறது.
Akshaya Tritiya 2025: அக்ஷய திரியை பூஜைக்கு உகந்த நேரம் எது தெரியுமா? 2025ஆம் ஆண்டு அக்ஷய திருதியை ஏப்ரல் 30ஆம் தேதி வருகிறது.
Published on: April 26, 2025 at 10:18 pm
Updated on: April 26, 2025 at 10:50 pm
சென்னை, ஏப்.26 2025: இந்து மதத்தின் மிகவும் புனிதமான பண்டிகையாக அக்ஷய திருதியை வருகிறது. இந்தப் பண்டிகையை அக தீஜ் எனவும் அழைப்பார்கள். இந்தப் பண்டிகை வைகாசி மாதத்தின் சுக்ல பக்ஷ திருதியை அன்று வருகிறது. மேலும், “அக்ஷய” என்ற வார்த்தைக்கு “ஒருபோதும் குறையாது” என்று பொருள்.
அந்த வகையில், இந்த நாளில் செய்யப்படும் எந்தவொரு நல்ல செயலும், பிரார்த்தனையும் நீடித்த, நித்திய நன்மைகளைத் தரும் என்பது பொருள். இந்தப் பண்டிகை இந்த ஆண்டு (2025) ஏப்ரல் 30ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஆக, இது மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது.
அக்ஷய திருதியை பூஜை
அதிகாலையில் எழுந்து, குளித்து, பூஜை அறையை சுத்தம் செய்து நாளைத் தொடங்குங்கள். லட்சுமி, விஷ்ணு, விநாயகர் மற்றும் குபேரர் சிலைகளை வைத்து பூஜிக்கவும். சிலைகளை புனித நீரால் சுத்தம் செய்து, பின்னர் சந்தனம் மற்றும் குங்குமம் வைக்கவும். பச்சரிசி, வெற்றிலை, தேங்காய் மற்றும் வெற்றிலை போன்ற பிற புனிதப் பொருட்களை வைத்து பூஜிக்கவும்.
என்னென்ன உணவுப் பொருள்கள் எடுத்துக் கொள்ளலாம்?
அக்ஷய திருதியை நன்நாளில் பழங்கள், தயிர், அவல் பாயாசம், சபுதானா கிச்சடி உள்ளிட்ட பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்.
தங்கம் வாங்குவது ஏன்?
அக்ஷய திருதியை பல மத மற்றும் புராண நம்பிக்கைகளுடன் தொடர்புடையது. மேலும் மிக முக்கியமான பாரம்பரியங்களில் ஒன்று தங்கம் வாங்குவதாகும். இந்த நாள்களில் தங்கம் வாங்கினால் அது பெருகும் என்பது நம்பிக்கையாகும். ஆகவே, இந்த நாளில் மக்கள் தங்கம் வாங்க விரும்புகின்றனர். இது தவிர உப்பு உள்ளிட்ட பொருள்களும் வாங்கலாம் என்பது இந்துக்களின் ஐதீகம் ஆகும்.
இதையும் படிங்க : காதலின் சின்னம் தாஜ்மஹால் இன்று கட்டப்பட்டால்.. எவ்வளவு செலவாகும்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com