TTV Dinakaran congratulates Salem tribal student: ஜே.இ.இ. தேர்வில் சாதனை படைத்துள்ள சேலம் பழங்குடி மாணவிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
TTV Dinakaran congratulates Salem tribal student: ஜே.இ.இ. தேர்வில் சாதனை படைத்துள்ள சேலம் பழங்குடி மாணவிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on: June 5, 2025 at 11:10 pm
சென்னை, ஜூன் 5 2025: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “JEE நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னை ஐ.ஐ.டியில் இடம் பிடித்து சாதனை படைத்திருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “உடல்நலக்குறைவால் மறைந்த தந்தையின் கனவை தன் லட்சியமாகக் கொண்டு, விடாமுயற்சியின் மூலம் சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்திருக்கும் மாணவி ராஜேஸ்வரி அவர்களின் உயர்கல்விப் பயணம் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : இந்த ஐந்து மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு தடை.. ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் திடீர் அறிவிப்பு.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com