SBI சிறப்பு அதிகாரி பணி; 1,571 காலியிடங்கள்: விண்ணப்பிக்கும் முறை – ஸ்டெப் பை ஸ்டெப்!

SBI Bank Jobs | ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பல்வேறு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த ஸ்டெப் பை ஸ்டெப் வழிமுறைகள் இங்கு உள்ளன.

Published on: September 20, 2024 at 8:44 pm

SBI Bank Jobs | எஸ்.பி.ஐ. 2024ஆம் ஆண்டுக்கான சிறப்பு அதிகாரி (எஸ்.ஓ) பணிக்கு 1571 காலிப்பணியிடங்கள் அறிவித்துள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான அறிவிப்பு செப்டம்பர் 14 ஆம் தேதி எஸ்.பி.ஓ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியானது. வெவ்வேறு பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி

பி.பி.ஏ., பி.சி.ஏ., பொறியியல் மற்றும் எம்.இ, எம்.டெக். என பதவியைப் பொறுத்து கல்வித்தகுதி மாறுபடும்

விண்ணப்பிக்கும் முறை

இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

வயது வரம்பு

பதவியைப் பொருத்து 21 முதல் 48 வயது உள்ளவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

ஜெனரல், ஓபிசி பிரிவினருக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 24 மற்றும் அக்டோபர் 4 ஆகும்.

மேலும், விவரங்களுக்கு எஸ்.பி.ஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in.-ல் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

எஸ்.பி.ஐ. பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

  • எஸ்.பி.ஐ. -ன் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in ஐப் பார்வையிடவும்.
  • முகப்புப் பக்கத்தில், “அறிவிப்புகள்” (Announcements) பிரிவில் கிளிக் செய்யவும்.
  • அறிவிப்புகளின் கீழ் “எஸ்.பி.ஐ. நோட்டிபிகேஷன் 2024”ஐப் பார்வையிடவும்
  • விரிவான அறிவிப்பை PDF மூலம் பார்வையிட்ட பிறகு, “அப்ளை ஆன்லைன்” என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ஒரு புதிய பக்கம் தோன்றும், அங்கு “புதிய பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்”(Click Here For New Registration) என்பதைக் கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.
  • தேவையான விவரங்களை வழங்கி விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  • எஸ்.பி.ஐ. எஸ்.ஓ. விண்ணப்பப் படிவம் 2024 -ல் தகவல்களை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து பின் ‘சப்மிட்’ என்பதை கிளிக் செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தைஎதிர்கால தேவைக்காக பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.

இதையும் படிங்க : கனரா வங்கியில் அப்ரண்டீஸ் பணி; டிகிரி தகுதி: 3,000 பணியிடங்கள் அறிவிப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com