RBI Recruitment 2025: ரிசர்வ் வங்கியில் மருத்துவ பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
RBI Recruitment 2025: ரிசர்வ் வங்கியில் மருத்துவ பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
Published on: February 14, 2025 at 3:14 pm
ரிசர்வ் வங்கி பணி: இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ ஆலோசகர் (MC) பதவிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை இன்று (பிப்.14, 2025) ஆகும். தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 14, 2025 அன்று மாலை 4:40 மணிக்குள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நான்கு பகுதி நேர வங்கியின் மருத்துவ ஆலோசகர் (MC) பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
இந்த பணியிடங்கள் குறிப்பாக கொல்கத்தாவில் அமைந்துள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் மருந்தகங்களுக்கானவை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கல்வித் தகுதி
மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலால் (MCI) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பொது மருத்துவத்தில் முதுகலை பட்டமும் தகுதியானது.
மேலும், மருத்துவ பயிற்சியாளராக குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, காலக்கெடுவிற்கு முன் குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அதாவது, விண்ணப்பத்தை சீல் வைக்கப்பட்ட உறையில் பிராந்திய இயக்குநர், மனிதவள மேலாண்மைத் துறை, ஆட்சேர்ப்புப் பிரிவு, இந்திய ரிசர்வ் வங்கி, கொல்கத்தா பிராந்திய அலுவலகம், 15, நேதாஜி சுபாஷ் சாலை, கொல்கத்தா – 700001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எஸ்.சி மற்றும் எஸ்.டி மாணவர்கள்
பட்டியல் சாதி (எஸ்.சி) அல்லது பட்டியல் பழங்குடி (எஸ்.டி) பிரிவுகளின் கீழ் இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள், அத்தகைய இடஒதுக்கீடுகளுக்குத் தகுதியுடையவர்கள் என்பதை உறுதி செய்வது அவசியம்.
தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் தேவையான சான்றிதழ்களை தங்கள் விண்ணப்பத்துடன் இணைத்து இருக்க வேண்டும்.
எழுத்து தேர்வு இல்லை
நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு செயல்முறை மூலம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்தப் பதவி மூன்று வருட ஒப்பந்தத்தில் உள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 ஊதியம் வழங்கப்படுகிறது.
இந்தப் பணி இடங்களுக்கு எழுத்து தேர்வுகள் நடத்தப்படாது.
இதையும் படிங்க : IBPS SO மெயின்ஸ் தேர்வு ஸ்கோர் கார்டுகள் வெளியீடு; பதிவிறக்கம் செய்வது எப்படி?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com