ஐ.பி.பி.எஸ் வங்கி அதிகாரி பணிக்கு தேர்வு தேதி அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
ஐ.பி.பி.எஸ் வங்கி அதிகாரி பணிக்கு தேர்வு தேதி அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
Published on: September 23, 2024 at 11:14 pm
IBPS Bank PO Exam | ஐ.பி.பி.எஸ் ப்ரோபேஷனரி அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் (PSBs) ப்ரோபேஷனரி அதிகாரியாக நியமிக்கப்படுவார்கள். ஐ.பி.பி.எஸ் (IBPS) அதிகாரி பணிக்கு தேர்வை 2011 முதல் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. தற்போது, 3,955 பணிக்கு தேர்வுகள் நடத்தப்பட்டுவருகின்றன. இந்தத் தேர்வை 11 வங்கிகள் நடத்துகின்றன.
முக்கிய தேதிகள்
வங்கி அதிகாரி பணிக்கு அக்.19, 20 ஆகிய தேதிகளில் முதல் நிலை தேர்வு நடத்தப்படும். மெயின் தேர்வு நவம்பர் 30ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்கேற்கும் வங்கிகள்
இதில் அதிகப்பட்சமாக சென்டிரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 225 பணிகள் பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு சம்பளமாக ரூ.52 ஆயிரம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com