IBPS SO Main Result 2024: IBPS SO மெயின்ஸ் தேர்வு 2024 ஸ்கோர் கார்டுகள் வெளியாகி உள்ளன.
IBPS SO Main Result 2024: IBPS SO மெயின்ஸ் தேர்வு 2024 ஸ்கோர் கார்டுகள் வெளியாகி உள்ளன.
Published on: February 14, 2025 at 10:41 am
வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம், 2024ஆம் ஆண்டுக்கான IBPS SO மெயின்ஸ் தேர்வு ஸ்கோர் கார்டுகளை வெளியிட்டுள்ளது.
தேர்வில் கலந்து கொண்டவர்கள், ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஸ்கோர் கார்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணபதாரர்கள் தங்கள் பாஸ்வேர்ட் அல்லது பிறந்த தேதி, பதிவு எண் அல்லது ரோல் நம்பரைப் பயன்படுத்தி தங்கள் ஸ்கோர் கார்டை பெறலாம்.
ஸ்கோர் கார்டை பதிவிறக்கம் செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும். இதில் அவர்களின் பெயரின் எழுத்துப்பிழை, பதிவு எண், தேர்வு மையம், தேர்வுத் தாள்கள்,தேர்வு தேதி, மதிப்பெண்கள், பாஸ்போர்ட் அளவு படம் போன்ற அனைத்து விவரங்களும் அடங்கும். இவற்றில் ஏதேனும் பிழை இருந்தால், நேர்காணல் தொடங்குவதற்கு முன்பு அதை சரிசெய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பதிவிறக்கம் செய்வது எப்படி?
IBPS சிறப்பு அதிகாரிகள் (SO) மெயின்ஸ் தேர்வு 2024 டிசம்பர் 14, 2024 அன்று நடைபெற்றது. சட்ட அதிகாரி, மனிதவளம்/பணியாளர் அதிகாரி, ஐடி அதிகாரி, வேளாண் கள அதிகாரி, மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி பதவிகளுக்கு 60 மதிப்பெண்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டது.
இதையும் படிங்க அடுத்த வாரம் ஹால் டிக்கெட்.. 11, 12 மாணாக்கர்கள் நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com