PM Internship Scheme 2025: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொன்னான வாய்ப்பு. பி.எம் (PM) இன்டர்ன்ஷிப் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
PM Internship Scheme 2025: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொன்னான வாய்ப்பு. பி.எம் (PM) இன்டர்ன்ஷிப் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on: March 6, 2025 at 9:09 pm
தங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கு பி.எம். இன்டர்ன்ஷிப் திட்டம் (PMIS) சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.பி.எம். இன்டன்ஷிப் ஸ்கீம் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான தொழில்துறை பயிற்சிக்கான விண்ணப்ப போர்ட்டலை திறந்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 12, 2025 வரை அதிகாரப்பூர்வ வலைத்தளமான pminternship.mca.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவின் உள்ள சிறந்த 500 நிறுவனங்களில் சிலவற்றில் நேரடியாக பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்தின் மூலம் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், பணி அனுபவத்தை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.
புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் தங்கள் தொழில் துறையில் வெளிப்பாட்டைப் பெற விரும்புபவர்களுககும் இந்தத் திட்டம் உதவுகிறது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி
வருமான வரம்பு
குடும்பத்தின் ஆண்டு வருமானம் (சுய, மனைவி அல்லது பெற்றோர்) ரூ. 8 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த தேவையில்லை.
உதவித்தொகை
12 மாத பயிற்சி காலம் முழுவதும் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் மாதம் ரூ. 5,000 வழங்கப்படும்.
மானியம்
பயிற்சியில் சேர்ந்த பிறகு, ரூ. 6,000 ஒரு முறை மானியமாக உங்கள் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
காப்பீடு
பயிற்சியாளர்கள் இந்திய அரசாங்கத்தின் காப்பீட்டுத் திட்டங்களின் கீழ் காப்பீட்டுத் தொகையைப் பெறுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
இதையும் படிங்க நிதி ஆயோக் இன்டென்ஷிப்.. மாணவர்கள் எப்படி விண்ணப்பிப்பது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com