Railway Jobs | இந்திய ரயில்வேயில் ஆர்.ஆர்.பி. என்.டி.பி.சி (RRB NTPC) 11 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையை துவக்கி உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு அக்டோபர் 20 விண்ணப்பிக்க கடைசி தேதியாகவும், விண்ணப்பக் கட்டணத்தை அக்டோபர் 28 வரை டெபாசிட் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அக்டோபர் 30 கடைசி தேதியாகவும் விண்ணப்ப கட்டணத்தை நவம்பர் 6 வரை டெபாசிட் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 20 ஆகும்.
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.500 ஆகும்.
எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், முன்னாள் ராணுவத்தினர், மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும்.
அப்ளை செய்வது எப்படி?
- இந்திய ரயில்வேயின் ஆட்சேர்ப்புக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான rrbapply.gov.in க்குச் செல்லவும்.
- RRB NTPC 2024 ஆட்சேர்ப்பு அறிவிப்பு என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பும் முன் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கவனமாக படிக்கவும்.
- லாகின் செய்வதற்காக, உங்கள் அடிப்படை தகவலை கொடுத்து பதிவு செய்யவும்.
- பதிவுசெய்த பிறகு, லாகின் செய்து படிவத்தை நிரப்பவும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்கள், கல்வித் தகவல்கள் மற்றும் பிற அத்தியாவசியத் தகவல்களை நிரப்பவும்.
- பின்னர், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன், தகவல்கள் அனைத்தையும் சரியாக கொடுத்துள்ளீர்களா என்பதை ஒருமுறை பரிசோதித்துவிட்டு சமர்ப்பிக்கவும்.
- பின்னர் எதிர்கால தேவைக்கு படிவத்தை டவுன்லோடு செய்த வைத்தக்கொள்ளவும்.
- மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான rrbapply.gov.in இல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க : ஜாமியா மில்லா இஸ்லாமிய பல்கலையில் பி.ஹெச்டி படிக்க திட்டமா? உடனே முந்துங்க!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்.17, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Anbumani ramadoss: திமுகவுக்கு தாளம் போடுபவர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் ஜனநாயக படுகொலை செய்வதா என வினவியுள்ளார் அன்புமணி ராமதாஸ்….
Tamil News Live Updates October 16 2025: தமிழ்நாடு மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள் குறித்த சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்….
Narendra Modi: பீகார் சட்டமன்ற தேர்தலில், ஒன்றிணைந்து தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்….
Ravi Naik passes away: கோவா வேளாண் அமைச்சரும் முன்னாள் முதல்வருமான ரவி நாயக் மாரடைப்பால் காலமானார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்