Tamil Nadu Pink Auto Scheme | தமிழகத்தில் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு நவம்பர் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Pink Auto Scheme | தமிழகத்தில் பிங்க் ஆட்டோ திட்டத்திற்கு நவம்பர் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on: November 1, 2024 at 5:51 pm
Tamil Nadu Pink Auto Scheme | பெண்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், பெண்கள் சொந்த காலில் நிற்கவும் உதவும் வகையில், ‘பிங்க் ஆட்டோ’ திட்ட முயற்சி தொடங்கப்ட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய பெண்களை சமூக நலத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பெண்களுக்கு உதவும் வகையில். சென்னையில் பெண்கள் ஓட்டும் இளஞ்சிவப்பு ஆட்டோ ரிக்ஷாக்கள் தொடங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் ஜூன் மாதம் சட்டசபையில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, சிஎன்ஜி/ஹைப்ரிட் ஆட்டோ ரிக்ஷாக்களின் மொத்த விலையில் ரூ.1 லட்சத்தை அரசு மானியமாகப் பெற தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
மானியத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கடைசி தேதி
நவம்பர் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பங்களை காலக்கெடுவிற்கு முன் சென்னை சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். ஒரு பெண் ஒரு ஆட்டோ ரிக்ஷாவிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com