PhD scholars from Anna University: அண்ணா பல்கலைக்கழக பிஎச்.டி. ஆய்வாளர்களுக்கு தனி பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
PhD scholars from Anna University: அண்ணா பல்கலைக்கழக பிஎச்.டி. ஆய்வாளர்களுக்கு தனி பட்டமளிப்பு விழா நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: February 3, 2026 at 1:10 pm
சென்னை, பிப்.3, 2026: அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. பட்டம் பெற்ற ஆய்வாளர்களுக்கு தொடர்பான முடிவு பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 30, 2025க்குப் பிறகு வைவா (viva-voce) முடித்த ஆய்வாளர்கள், பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெறும் 46வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க முடியாது என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இவர்களுக்கு தனியாக பிப்ரவரி மாதத்தில் வேறு ஒரு தேதியில் நிகழ்ச்சி நடத்தப்படும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது, ஜூன் 30, 2025க்குள் வைவா முடித்தவர்கள் மட்டுமே, பிப்ரவரி 4, 2026 – 46வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஜூன் 30க்குப் பிறகு விவா முடித்தவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் தனி விழா நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தேதி அறிவிக்கப்படவில்லை.
பல்கலைக்கழக விளக்கம்
இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “2024க்குப் பிறகு அதிகமான ஆய்வாளர்கள் தகுதி பெற்றதால், ஒரே நாளில் அனைவரையும் சேர்ப்பது சாத்தியமில்லை என்றும் ஒரு விழாவில் சுமார் 750 பேரை மட்டுமே அமர்த்த முடியும் என்பதால், தனி விழா நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : NCHM JEE 2026– பதிவு நீட்டிப்பு.. புதிய தேதியை நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com