“With Love” OTT release: திரையரங்குகளில் ரசிகர்களின் சிறந்த வரவேற்பு பெற்ற ‘வித் லவ்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
“With Love” OTT release: திரையரங்குகளில் ரசிகர்களின் சிறந்த வரவேற்பு பெற்ற ‘வித் லவ்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Published on: March 3, 2026 at 2:01 pm
சென்னை, மார்ச் 3 2026:டூரிஸ்ட் பேமிலி பட இயக்குனர் அபிஷன் ஜீவந்த் கதாநாயகனாகவும், மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் கதாநாயகி ஆகவும் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘வித் லவ்’. இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் அபிஷன் ஜீவந்த் உதவி இயக்குனராக இருந்த மதன் இந்த படத்தை இயக்கியுள்ளார். நகைச்சுவை காதல் கதையான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் காவியா அனில், ஹரிஷ் குமார், சச்சின் நாச்சியப்பன் தேனி முருகன், ஆர்.ஜே. ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர்.
தியேட்டரில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படம் வருகிற ஆறாம் தேதி netflixல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீதிக்காக போராடும் வழக்கறிஞர் தாப்ஸி பன்னு.. அஸ்ஸி படத்துக்கு ஏ சான்றிதழ் ஏன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com