ஜனநாயகன் முழுப் படம் இணையத்தில் கசிவு: அதிர்ச்சியில் படக்குழு

Jana Nayagan leaked online : நடிகர் விஜய் நடித்திருக்கும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் முழுமையாக இணையத்தில் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல் படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published on: April 10, 2026 at 1:33 pm

Updated on: April 10, 2026 at 4:05 pm

சென்னை, ஏப். 10 2026: நடிகர் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ முழுப் படமும் ஆன்லைனில் கசிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

முதலில் படத்தின் சில நிமிட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் முழு HD பதிப்பு படமும் திருட்டுத்தளங்களில் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நேற்று படத்தின் டைட்டில் காட்சி, விஜயின் அறிமுக காட்சி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வெளியானதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று அதிகாலை முழு படம் இணையத்தில் வெளியானது. இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திரைப்படம் ஆன்லைனில் கசிந்ததற்கு காரணமானவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ரசிகர்கள் திருட்டு லிங்குகளை பகிர வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இணையத்தில் வெளியான ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

‘ஜன நாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக வெளியீடு தாமதமாகி வந்த நிலையில், இந்த கசிவு சம்பவம் படக்குழுவுக்கு மேலும் சவாலாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் கல்லாப்பெட்டி கூட்டணி.. திமுகவை விமர்சித்த விஜய்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com