Priyanka Deshpande Marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது.
Priyanka Deshpande Marriage: விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது இரண்டாவது திருமணம் என கூறப்படுகிறது.
Published on: April 17, 2025 at 1:53 pm
சென்னை ஏப்ரல் 17 2025: விஜய் டிவியில் நகைச்சுவை மற்றும் பாடல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா. விஜய் டிவியை பொருத்தமட்டில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை இவர்தான் தொகுத்து வழங்குகிறார்.
பிரியங்கா தேஷ்பாண்டே என இயற்பெயர் கொண்ட இவர், பிரியங்கா என்று பெரும்பாலும் அறியப்படுகிறார். சின்னத்திரையை பொருத்தமட்டில் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.
அவ்வப்போது தொழில் போட்டியிலும் சிக்கிக் கொண்டு பிரியங்கா பெயர் அடிபடும். இந்த நிலையில் பிரியங்கா திடீர் திருமணம் செய்து கொண்டுள்ளார். மணமகன் வசி, திரைத்துறையை தாண்டி தொழில்களை கவனித்து வருகிறார். இது இரண்டாவது திருமணம் என்றும்; பெற்றோர் சம்மதத்தின் பெயரில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் இந்த திருமணத்தில் பிரியங்கா மற்றும் வசீ ஆகிய இருவரின் குடும்பத்தினர் மட்டும் பங்கெடுத்துள்ளனர். திருமணம் மிகவும் சிம்பிளாக நடைபெற்று உள்ளது. திருமணத்தை தொடர்ந்து, சின்னத்திரை தொகுப்பாளினி பிரியங்காவுக்கு பல்வேறு சின்னத்திரை நடிகர் நடிகைகளும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க அஜித் குமாருடன் கார் பயணம்.. மிஸ் செய்கிறேன் என்கிறார் பிரியா வாரியர்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com