Viduthalai Part 2 |வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரியின் நடிப்பில் வெளியான விடுதலை முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாகம் 2 அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Viduthalai Part 2 |வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரியின் நடிப்பில் வெளியான விடுதலை முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாகம் 2 அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
Published on: August 30, 2024 at 5:16 pm
Viduthalai Part 2 | வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரி கதாநாயகனாக நடித்திருந்த படம் விடுதலை. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
படத்தில் இளையராஜாவின் இசையில் காட்டு மல்லி என்ற பாடல் பட்டித் தொட்டியெங்கும் வாசம் வீசியது. அதேநேரத்தில், படத்தில் காவல் நிலைய கொடுமை காட்சிகளும் இருந்தன.
இந்தக் காட்சிகள் பலராலும் விமர்சிக்கப்பட்டன. இந்தக் காட்சிகள் வெற்றிமாறனின் மற்றொரு படமான விசாரணையை கண்முன்னே நிறுத்துவதாகவும் கூறி இருந்தனர்.
இந்த நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, விடுதலை பாகம் 2 வரும் டிசம்பரில் வெளியாக உள்ளது.
விடுதலை படம் 1987ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உருவான மக்கள் விடுதலை இயக்கத்தை அடிப்படையாக கொண்டது. படத்தில் குமரேசன் (சூரி) கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது.
அதேபோல், விஜய் சேதுபதியின் பெருமாள் வாத்தியார் கதாபாத்திரமும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியது. பெருமாள் வாத்தியார் மக்கள் படையை நடத்திவருவதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதையும் படிங்க : அமிதாப் vs ஷாருக்கான்: கோடிகளில் புரளும் பணக்கார பாலிவுட் நடிகர் இவர்தான்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com