மறைந்த கவிஞர் வாலி, கவியரசு கண்ணதாசன் குறித்து என்ன பேசினார் தெரியுமா? திரைத்துறையில் கண்ணதாசன் கொடி கட்டி பறந்த காலத்தில், உள்ளே நுழைந்தவர் தான் கவிஞர் வாலி.
மறைந்த கவிஞர் வாலி, கவியரசு கண்ணதாசன் குறித்து என்ன பேசினார் தெரியுமா? திரைத்துறையில் கண்ணதாசன் கொடி கட்டி பறந்த காலத்தில், உள்ளே நுழைந்தவர் தான் கவிஞர் வாலி.
Published on: December 6, 2024 at 11:16 am
Vaali spoke about Kannadasan | தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட இயக்கங்களின் கொள்கைகளை அடிமட்ட தொண்டர்களுக்கும் கொண்டு போய் சேர்த்ததில் எம்.ஜி.ஆருக்கு பெரும் பங்கு உண்டு. அவர் சினிமாவில் நடித்த காலகட்டங்களில், பெரும்பாலும் அறிஞர் அண்ணா மற்றும் அவர் தொடங்கிய திமுகவை சார்ந்து காட்சிகளை வைத்திருப்பார்.
பெரும்பாலும் எம்ஜிஆர் பாடல்கள் திமுகவின் புகழ்கள் எழுதப்பட்டிருக்கும். கண்ணதாசன் உடன் பிணக்கு ஏற்பட்ட பிறகு, எம்ஜிஆர் வாலி கூட்டணி உருவானது. எம்ஜிஆருக்காக வாலி பல பாடல்களை உருவாக்கினார்.
இந்தப் பாடல்கள் பெரும்பாலும் திமுகவின் கொள்கை சார்ந்தே காணப்பட்டது. ஒருங்கிணைந்த திமுகவில் எம்ஜிஆர் பயணித்ததால், தாம் அவ்வாறு பாடல்கள் எழுதியதாக கவிஞர் வாலி பல பேட்டிகளில் வெளிப்படையாக பேசியுள்ளார். தம்மீது திராவிட அரசியல் சாயம் இருந்ததையும்; எம்ஜிஆருக்காக மட்டும்தான் அவ்வாறு எழுதியதாகவும் அவர் பல பேட்டிகளில் கூறியுள்ளார். இந்த நிலையில் மறைந்த கவிஞர் வாலி ஒரு முறை கவியரசு கண்ணதாசன் குறித்து பேசினார்.
அப்போது கண்ணதாசன் திரைத்துறையில் கொடி கட்டி பறந்த போது, தான் சினிமாவில் நுழைந்ததையும், கண்ணதாசன் தனக்கு ஆரோக்கியமான வரவேற்பு அளித்ததையும் கவிஞர் வாலி கூறினார். மேலும், கவியரசு கண்ணதாசன் காமராஜர் காங்கிரஸ் என்றும் தான் எம்ஜிஆர் திமுக என்றும் கூறினார்.
இதனால் இரு கட்சியினரும் எங்களை வைத்து மோதிக் கொள்வார்கள் என்றும் வாலி கூறினார். தொடர்ந்து சினிமாவில் காசு வந்ததால் பாடல்கள் எழுதினேன் என ஜாலியாக பேசி இருப்பார். வெளிப்படையாக பேசும் நபர்களில் கவிஞர் வாலி முதன்மையானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com