Neela nira suriyan Movie Teaser | தமிழ் திரையுலகின் முதல் திருநங்கை இயக்குனராக சம்யுக்தா விஜயன் அறியப்படுகிறார். இவரின் இயக்கத்தில் நீல நிறச் சூரியன் படம் தயாராகி உள்ளது.
தமிழில் நீல நிறச் சூரியன் என்ற படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தை சக்யுக்தா விஜயன் இயக்கி நடித்துள்ளார். ஒரு உடற்பயிற்சி ஆசிரியர் தான் ஆண் அல்ல; பெண் என உணர்ந்து அவர் பாலியல் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணாக மாற முடிவு செய்கிறார்.
அவரை இந்தச் சமூகம் ஏற்றுக்கொண்டதா? அவர் என்னென்ன பிரச்னைகளை அனுபவிக்கிறார் என்பதுதான் நீல நிறச் சூரியனின் கதை. இந்தப் படம் திருநங்கைகளின் வலி பற்றி ஆழமாக எடுத்துக் கூறுகிறது. இந்தப் படம் குறித்து பேசிய திருநங்கை இயக்குனர் சம்யுக்தா விஜயன், “படத்தில் திருநங்கைகளின் வலியை நாடகத் தன்மை இல்லாமல் கொடுக்க விரும்பினேன். திருநங்கைகள் படும் துயரை இதில் காட்சிப்படுத்தியுள்ளேன்” என்றார்.
நீலச் நிறச் சூரியன் படம் சர்வதேச இந்திய திரைப்பட விழா மற்றும் கிளாஸ்கோ திரைப்பட விழா உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்று பாராட்டை பெற்றுள்ளது. இந்தப் படத்தின் டீசரை கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Identity OTT release : டொவினோ தாமஸ், திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்…
Vanagan movie review | பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் வணங்கான். இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு நேற்று திரையரங்குகளில் வெளியானது. இது ரசிகர்கள்…
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.