பிரபல நடிகர் தக்காளி சீனிவாசன் காலமானார்!

Thakkali Srinivasan Death: தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் என பல துறைகளில் பணியாற்றிய தக்காளி சீனிவாசன் உடல் நலக்குறைவால் காலமானார்.

Published on: March 11, 2026 at 3:43 pm

பெங்களூரு, மார்ச் 11, 2026: தமிழ் திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் என பல துறைகளில் பணியாற்றியவர் தக்காளி சீனிவாசன். 66 வயதான இவர் உடல்நலக் குறைவு காரணமாக சில காலமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பெங்களூருவில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று பெங்களூருவில் நடைபெறுகிறது.

தக்காளி சீனிவாசன் தமிழில் வெளியான இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளை மனிதன், அதிசய மனிதன் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். மேலும் ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், அசோகவனம், அடுத்தது உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். அதேபோல் நாளை மனிதன், வலது காலை வைத்து வா, அதிசய மனிதன், ஜென்ம நட்சத்திரம், விட்னஸ், புதிய ஆட்சி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும், சூரசம்ஹாரம், நாளை மனிதன், சிறையில் சில ராகங்கள், ஜென்ம நட்சத்திரம், விட்னஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். வாழ்க்கையின் இறுதி காலங்களில் ஒரு ஆசிரமம் நடத்தி, தத்தெடுத்த குழந்தைகளுடன் மனிதநேய சேவையில் ஈடுபட்டு வந்தார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்த அமீர்கான் படத்த தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டீங்களா…கவலைய விடுங்க… ஓடிடில வந்தாச்சு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com