Allu Arjun: புஷ்பா-3 குறித்து அப்படத்தின் இயக்குனர் சுகுமார் ஒபனாக பேசியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Allu Arjun: புஷ்பா-3 குறித்து அப்படத்தின் இயக்குனர் சுகுமார் ஒபனாக பேசியுள்ளார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published on: September 15, 2025 at 5:10 pm
ஹைதராபாத், செப்.15, 2025: கடந்த வாரம் துபாயில் நடைபெற்ற சீமா (SIIMA) திரைப்பட விழாவில், புஷ்பா 2: தி ரூல் படத்திற்காக புஷ்பா குழு ஐந்து பெரிய விருதுகளை வென்றது. இந்நிகழ்ச்சியில், இயக்குனர் சுகுமார், முன்னணி நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸின் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த, விருதுகளை வென்ற பிறகு, படத்தின் மூன்றாம் பாகமான புஷ்பா 3: தி ராம்பேஜ் நிச்சயமாக உருவாகும் என்பதை இயக்குனர் சுகுமார் உறுதிப்படுத்தினார். புஷ்பா குழுவினர் மேடைக்கு வந்த பிறகு, தொகுப்பாளர்கள் அவர்களிடம், “பார்ட்டி லேதா புஷ்பா? (புஷ்பா, பார்ட்டி இல்லையா?)” என்று ஃபஹத் பாசிலின் கதாபாத்திரமான பன்வர் சிங் ஷெகாவத்தின் பிரபலமான வசனத்தைக் குறிப்பிட்டு நகைச்சுவையாகக் கேட்டனர்.
இதற்குப் பதிலளிக்கும் முன்னர் இயக்குனர் சுகுமார் தயாரிப்பாளரையும் அர்ஜுனையும் பார்த்தார். பின்னர் இந்தக் கேள்விக்கு நான் வெளிப்படையாக பதிலளிக்கிறேன். நிச்சயமாக புஷ்பா 3 உண்டு என்றார். அப்போது பலரும் கைதட்டி ஆரவாரத்தை கொடுத்தனர்.
யார் யாருக்கு விருதுகள்?
இந்த சீமா (SIIMA)விருது வழங்கும் நிகழ்ச்சியில், அர்ஜுன் சிறந்த நடிகருக்கான விருதையும், ராஷ்மிகா சிறந்த நடிகைக்கான விருதையும், சுகுமார் சிறந்த இயக்குனருக்கான விருதையும், தேவி சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், ஷங்கர் பாபு கண்டுகுரி பீலிங்ஸ் படத்திற்காக சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்) விருதையும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘விஷால் தாலிகட்டிய பின்னர் திருமணம் செய்வேன்’; அதர்வா முரளி ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com