Singer Velmurugan: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களுக்கு இடையே எவ்வித போட்டியும் இல்லை என பாடகர் வேல்முருகன் கூறினார்.
Singer Velmurugan: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களுக்கு இடையே எவ்வித போட்டியும் இல்லை என பாடகர் வேல்முருகன் கூறினார்.

Published on: January 2, 2026 at 6:10 pm
திருச்செந்தூர் ஜனவரி 2, 2026: நடிகர் விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களுக்கு இடையே எவ்வித போட்டியும் இல்லை என பிரபல பாடகர் வேல்முருகன் திருச்செந்தூரில் பேட்டி அளித்தார். நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜயின் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் 2026 பொங்கல் வெளியீடாக வெளியாகிறது.
முன்னதாக படத்தின் பாடல்கள் மற்றும் இசை வெளியீட்டு விழா மலேசியா நாட்டில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது; இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, முன்னோட்டக் காட்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.
இதையும் படிக்க; ஹேப்பி நியூ ஈயர் 2026: விஜய் தேவரகொண்டாவை கட்டியணைத்த ராஷ்மிகா மந்தனா!
இதற்கிடையில் ஜனவரி 3ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்தின் விழா சென்னையில் நடைபெற உள்ளது; இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக விளக்கம் அளித்த படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்,” பராசக்தி திரைப்பட விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொள்ள வில்லை” என கூறினார்.
திருச்செந்தூரில் வேல்முருகன் பேட்டி
இந்த நிலையில் பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் திருச்செந்தூரில் சுவாமி முருகரை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” நடிகர் விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஆகியோரின் படங்களுக்கு இடையே எவ்வித போட்டியும் இல்லை” என்றார்.
மேலும், ” ஜனநாயகன் மற்றும் பராசக்தி ஆகிய இரு திரைப்படங்களும் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கும்” என குறிப்பிட்ட பாடகர் வேல்முருகன், ” பராசக்தி திரைப்படத்தில் இரு பாடல்களை பாடி உள்ளேன்” என்றார்.
இதையும் படிக்க; சிஸ்டர் மிட்நைட் OTT வெளியீடு.. எந்தத் தளம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com