Singer Shwetha Mohan : தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இது ரசிகர்களால் சாத்தியமானது என பாடகி ஸ்வேதா மோகன் தெரிவித்துள்ளார்.
Singer Shwetha Mohan : தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்ட நிலையில், இது ரசிகர்களால் சாத்தியமானது என பாடகி ஸ்வேதா மோகன் தெரிவித்துள்ளார்.
Published on: September 24, 2025 at 8:30 pm
சென்னை, செப்.24, 2025: தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள் இன்று (செப்.24, 2025) அறிவிக்கப்பட்டன. இதில் பிரபல பாடகி ஸ்வேதா மோகனுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது.
இதற்கு பாடகி ஸ்வேதா மோகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரசிகர்களால்தான் இது சாத்தியமானது. இசையமைப்பாளராக வேண்டும் என்பதே என் கனவாக இருந்தது. ஆனால் பாடகியாக கவனம் செலுத்தினேன்” என்றார்.
தொடர்ந்து, “15 வருடங்களுக்கு மேலாக பாடிவரும் எனக்கு கிடைக்கப்பட்ட அங்கீகாரம் இது” என்றும் உருக்கமாக தெரிவித்தார். இந்தியப் பின்னணிப் பாடகியான ஸ்வேதா மோகன், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகி சுஜாதா மோகன், கிருஷ்ணா மோகன் ஆகியோரின் மகளாகப் பிறந்த ஸ்வேதா, சிறந்த பெண் பின்னணிப் பாடகியருக்கான பிலிம்பேர் விருதுகளை 5 முறை பெற்றுள்ளார். இவர், 1985 நவம்பர் 19 அன்று சென்னையில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 1980ல் மலையாளத்தில் அறிமுகம்.. முதல் படமே வில்லன்.. தாதா சாகேப் பால்கே.. யார் இந்த மோகன் லால்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com